முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துணை ஜனாதிபதி தேர்தல்: பொது வேட்பாளரை நிறுத்த இன்டியா கூட்டணி திட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 10 ஆகஸ்ட் 2025      இந்தியா
INDIA 2023-08-30

Source: provided

டெல்லி : அடுத்த மாதம் 9ம் தேதி துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.;

நாட்டின் துணை ஜனாதிபதியாக இருந்த ஜக்தீப் தன்கர் கடந்த மாதம் 21ம் தேதி பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, அடுத்த மாதம் 9ம் தேதி துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அன்றைய தினமே எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 7ம் தேதி தொடங்கிய நிலையில் வரும் 21ம் தேதி நிறைவடைகிறது. இதுவரை யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

இந்நிலையில், துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த இன்டியா கூட்டணி திட்டமிட்டுள்ளது. இதற்காக இன்டியா கூட்டணியில் உள்ள கட்சிகளின் கருத்தை பெற காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முடிவெடுத்துள்ளார். அதேவேளை, துணை ஜனாதிபதி வேட்பாளரை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அறிவித்த பின்னர் காங்கிரஸ் தலைமையிலான இன்டியா கூட்டணி வேட்பாளரை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து