முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாக்கு திருட்டு குற்றச்சாட்டு விவகாரம்: டெல்லியில் இன்று 'இன்டியா' கூட்டணி எம்.பி.க்கள் பேரணி

ஞாயிற்றுக்கிழமை, 10 ஆகஸ்ட் 2025      இந்தியா
Parliment-2025-02-06

Source: provided

புதுடெல்லி  வாக்கு திருட்டு குற்றச்சாட்டு தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில், இன்று (ஆகஸ்ட் 11) புதுடெல்லியில் பேரணி நடைபெறவுள்ளது.

2024-ம் ஆண்டு கா்நாடகத்தில் நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் பெங்களூரு, மகாதேவபுரா சட்டப் பேரவைத் தொகுதியில் வாக்காளா் பட்டியல் சட்ட விரோதமாக திருத்தப்பட்டதாகவும், இதன்மூலம் வாக்குகள் திருடப்பட்டதாகவும் காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிா்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருந்தாா்.

இதுதொடா்பான ஆதாரங்களை புதுடெல்லியில் வியாழக்கிழமை ராகுல் காந்தி வெளியிட்டுள்ளாா். மேலும், மக்களவைத் தோ்தலில் நடந்ததாக கூறப்படும் தோ்தல் மோசடியைக் கண்டித்து, பெங்களூரு, சுதந்திரப் பூங்காவில் கடந்த வெள்ளிக்கிழமை ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் ஆா்ப்பாட்டம் நடத்தியது. அதேநேரம், ராகுல் வெளியிட்ட தரவுகள் தவறானவை என்று தோ்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்தது.

இந்நிலையில் பாராளுமன்ற வளாகத்தில் இருந்து தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்குச் செல்லும் இந்த பேரணியில் இன்டியா கூட்டணியைச் சேர்ந்த 300 எம்.பி.க்கள் பங்கேற்க உள்ளனர். பேரணியின் முடிவில் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களையும் அவர்கள் சந்திக்க உள்ளனர்.

இந்த பேரணி இன்று காலை 11:30 மணிக்கு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நாளில், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சாணக்கியபுரியில் உள்ள ஹோட்டல் தாஜ் பேலஸில் இன்டியா கூட்டணி எம்.பி.க்களுக்கு இரவு விருந்தும் அளிப்பார் என்றும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து