முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அடுத்த ஆண்டு சுதந்திர தினத்தில் தேசியக்கொடியை ஏற்றுவோம்: நயினார் நாகேந்திரன் நம்பிக்கை

வெள்ளிக்கிழமை, 15 ஆகஸ்ட் 2025      தமிழகம்
BJP-2025-8-15

சென்னை, நமது நாட்டின் 79-வது சுதந்திர தினவிழா நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை தி.நகரில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கமலாலயத்தில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். 

அப்போது அவர் கூறியதாவது:- டெல்லியில் பிரதமர் மோடி தேசியக்கொடியை ஏற்றி வைத்து நமது நாட்டின் சாதனைகளையும், தீவிரவாதத்துக்கு எதிராக நாம் மேற்கொண்ட நடவடிக்கைகளையும் எடுத்துக் கூறியுள்ளார். உலகின் மிகப்பெரிய தலைவராக பிரதமர் மோடி திகழ்ந்து வருகிறார். இந்தியாவை உலகின் மிகப்பெரிய 4-வது பொருளாதார நாடாக அவர் மாற்றி காட்டி இருக்கிறார்.

பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் எந்தவித சமரசத்துக்கும் இடம் கொடுக்க மாட்டோம் என்று பிரதமர் தெரிவித்திருக்கிறார். அதே நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார்கள். தமிழகத்தை பொறுத்தவரையில் கொலை, கொள்ளை, பாலியல் உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் அதிகரித்துவிட்டன. எனவே நாம் அனைவரும் தி.மு.க. ஆட்சியை அகற்றுவதற்கான உறுதிமொழியை எடுத்துக்கொள்ள வேண்டும். அதே நேரத்தில் போதைப்பொருட்களை ஒழிப்பதற்கும் நாம் உறுதி ஏற்க வேண்டும்.

தமிழகத்தில் தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் மற்றும் காங்கிரஸ் கும்பலைச் சேர்ந்தவர்கள் மத்திய அரசை அச்சுறுத்தி வருகிறார்கள். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் நிச்சயம் நாம் வெற்றி பெறுவோம். 2026-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று நிச்சயம் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை அமைக்கும். அப்போது நாம் சென்னை கோட்டையில் கொடி ஏற்றுவோம். இது உறுதி. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து