முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துலீப் கோப்பை கிரிக்கெட்: ஆகாஷ் தீப் விலகல்

வெள்ளிக்கிழமை, 15 ஆகஸ்ட் 2025      விளையாட்டு
Akash-Deep-2025-08-15

மும்பை, துலீக் கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் வரும் 28-ம் தேதி முதல் பெங்களூருவில் தொடங்கவுள்ளது.

மண்டல அணிகள்...

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் ஒன்றான துலீக் கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் வரும் 28-ம் தேதி முதல் பெங்களூருவில் தொடங்கவுள்ளது. இதில் மேற்கு மண்டலம் மற்றும் தெற்கு மண்டல அணிகள் நேரடியாக அரையிறுதி போட்டிக்கு தகுதிப்பெற்றுள்ளன. அதேவளை, வடக்கு மண்டலம், கிழக்கு மண்டலம், வடகிழக்கு மண்டலம் மற்றும் மத்திய மண்டல அணிகள் பிளே ஆப் போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் முதல் பிளே ஆப் போட்டியில் வடக்கு மண்டலம் - கிழக்கு மண்டல அணிகளும், இரண்டாவது பிளே ஆப் போட்டியில் மத்திய மண்டலம் மற்றும் வடகிழக்கு மண்டல அணிகளும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இப்போட்டிகள் வரும் 28-ம் தேதி நடைபெறவுள்ளன

முகமது ஷமி, ரியான்...

இதையடுத்து இப்போட்டியில் பங்கேற்கும் அணிகள் அறிவிக்கப்பட்டன. இதில் கிழக்கு மண்டல அணியின் கேப்டனாக இஷான் கிஷானும், அணியின் துணைக்கேப்டனாக அபிமன்யூ ஈஸ்வரனும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேற்கொண்டு, நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, ரியான் பராக் மற்றும் ஆகாஷ் தீப் உள்ளிட்ட வீரர்களும் இடம்பிடித்துள்ளனர்.

ஆகாஷ் தீப் விலகல்... 

இந்நிலையில் துலீப் கோப்பை தொடருக்கு முன்னதாக கிழக்கு மண்டல அணி பின்னடைவை சந்தித்துள்ளது. அதன்படி அந்த அணியின் இடம்பிடித்திருந்த ஆகாஷ் தீப் துலீப் கோப்பை தொடரில் இருந்து விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் முடிவடைந்த இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்குப் பிறகு அவர் சில அசவுகரியங்களை உணர்ந்ததாகவும், இதன் காரணமாக அவர் துலீப் கோப்பை தொடரில் இருந்து விலகியதாகவும் கூறப்படுகிறது.

முக்தார் உசேன் வாய்ப்பு

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் ஆகாஷ் தீப் மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடி13 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்சமயம் ஆகாஷ் தீப் தொடரில் இருந்து விலகியதை அடுத்து, அவருக்குப் பதிலாக அசாம் வேகப்பந்து வீச்சாளர் முக்தார் உசேன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். முக்தார் இதுவரை 40 முதல்தர போட்டிகளில் விளையாடி 132 விக்கெட்டுகளையும், 580 ரன்களையும் எடுத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து