Idhayam Matrimony

கவர்னர் தேநீர் விருந்து: அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்பு

வெள்ளிக்கிழமை, 15 ஆகஸ்ட் 2025      தமிழகம்
Rajbhavan

சென்னை, கவர்னர் தேநீர் விருந்தில்  அ.தி.மு.க., பாஜக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன.

இந்தியாவின் 79-வது சுதந்திர தின விழா நேற்று (வெள்ளிக்கிழமை) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சுதந்திர தினத்தையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள், மந்திரிகள், எம்.ல்.ஏ.க்களுக்கு மாநில கவர்னர்கள் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம்.

அந்த வகையில் கவர்னர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தில் பங்கேற்கும்படி அரசியல் கட்சி தலைவர்கள், மந்திரிகள், எம்.எல்.ஏ.க்களுக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்தார். இந்த நிலையில், கவர்னர் மாளிகையில் நடைபெற்று வரும் தேநீர் விருந்தில் அ.தி.மு.க. , பாஜக , பாமக , தேமுதிக , தாமாக உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டன.

அ.தி.மு.க. சார்பில் இன்பதுரை எம்.பி.,  பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன் , தமிழிசை செளந்தரராஜன், ஹெச்.ராஜா, அன்புமணி ஆதரவு பாமக எம்எல்ஏக்கள் சிவக்குமார், வெங்கடேஷ், சதாசிவம் , தமாகா சார்பில் ஜிகே வாசன் , தேமுதிக சார்பில் விஜய பிரபாகரன் பங்கேற்றுள்ளனர். மேலும் தமிழக அரசு சார்பில் தலைமை செயலாளர் முருகானந்தம்  , டிஜிபி சங்கர் ஜிவால் , மாநகர் காவல் ஆணையர் அருண் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர். கவர்னரின் தேநீர் விருந்தை திமுக , தவெக, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ளன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து