முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேலம் இ.கம்யூ கட்சி மாநில மாநாட்டில் பங்கேற்று முதல்வர் ஸ்டாலின் சிறப்புரை

சனிக்கிழமை, 16 ஆகஸ்ட் 2025      தமிழகம்
CM 2024-12-02 (2)

Source: provided

சேலம் : சேலம் நகரில் இ.கம்யூ கட்சி மாநில மாநாட்டில் பங்கேற்று முதல்வர் ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.

சேலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில மாநாடு பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள நேரு கலையரங்கில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் கம்யூனிஸ்டு கட்சி முன்னாள் எம்.பி. டி.ராஜா, பொதுச்செயலாளர் அமர்ஜித் கவுர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் உள்பட பலர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

மாநாட்டின் 2-வது நாளான நேற்று (16-ம் தேதி) வெல்க ஜனநாயகம் என்ற பெயரில் மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மாலை 6 மணியளவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த மாநாட்டில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் காமலாபுரம் விமான நிலையத்திற்கு வந்தார்.

அவருக்கு மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான ஆர்.ராஜேந்திரன், கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம் எம்.பி., மேற்கு மாவட்ட செயலாளர் டி.எம்.செல்வகணபதி எம்.பி. ஆகியோர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வழி நெடுக மக்கள் வரவேற்புடன் சேலம் நேரு கலையரங்கம் வந்தார். பின்னர் அவர் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநாட்டில் சிறப்புரையாற்றினார். இதையொட்டி அவர் செல்லும் வழிகளில் மாநகர போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரி, போலீஸ் சூப்பிரண்டு கவுதம் கோயல் ஆகியோர் தலைமையில் 1000-த்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மாநாட்டில் இன்று (17-ந் தேதி) கம்யூனிஸ்டு கட்சி சார்ந்த நிகழ்வுகளும், 18-ந் தேதி மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியாக ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டமும் நடைபெறுகிறது. இதில் கட்சியின் முன்னணி தலைவர்கள் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து