Idhayam Matrimony

கனமழையால் வெள்ளப்பெருக்கு: பாகிஸ்தானில் 307 பேர் பலி

சனிக்கிழமை, 16 ஆகஸ்ட் 2025      உலகம்
Pak-Rain-2025-08-16

இஸ்லாமாபாத், வடமேற்கு பாகிஸ்தான் மாகாணமான கைபர் பக்துன்க்வாவில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 307 பேர் உயிரிழந்துள்ளனர். 

வருகிற 21ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக மாகாண பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த 48 மணி நேரத்தில் 307 பேர் உயிரிழந்துள்ளனர். மேகவெடிப்பு மற்றும் வெள்ளப்பெருக்கால் இந்த உயிரிழப்பு நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

279 ஆண்கள், 15 பெண்கள், 13 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். புனர் மாவட்டம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு 184 பேர் உயிரிழந்துள்ளனர். மன்சேரா மாவட்டத்தில் 23 பேரும், ஷங்லா மாவட்டத்தில் 36 பேரும், பஜாயுர் மாவட்டத்தில் 21 பேரும், பட்டாக்ராம் மாவட்டத்தில் 15 பேரும் உயிரிழந்துள்ளனர். 74 வீடுகள்முற்றிலுமாக சேதமடைந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து