எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
திருவண்ணாமலை : அரசுக்கு வருவாய் முக்கியம் ஆனால் வரிகள் விதிக்கும் பொழுது வியாபாரிகள் தாக்குப் பிடிக்கும் அளவிற்கு வரிகளை விதிக்க வேண்டும் என்றும் இந்தியாவிலேயே வறட்சிக்கு நிவாரணம் வழங்கிய ஒரே அரசு அ.தி.மு.க. அரசு என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் பல்வேறு மாவட்டங்களில் தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதன் பேரில் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகை தந்த அவர் நேற்று காலை தனியார் தங்கும் விடுதியில் விவசாய சங்க பிரதிநிதிகள், வணிகர் சங்க பிரதிநிதிகள், நெசவாளர் சங்கப் பிரதிநிதிகள், மலைவாழ் மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை சந்தித்து கலந்துரையாடினார்.
அப்போது பேசிய அவர், சங்கப் பிரதிநிதிகள், 2026 ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் திருவண்ணாமலைக்கு குளிரூட்டப்பட்ட கிடங்கு ஏற்படுத்தி தர வேண்டும், சென்ட் தொழிற்சாலை, எண்ணெய் தொழிற்சாலை உள்ளிட்டவைகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்றும், எட்டு வழி சாலையை கைவிட வேண்டும், சிப்காட் திட்டத்தை கைவிட வேண்டும் கைத்தறி நெசவை பாதுகாக்க வேண்டும் விபத்துக்களை தடுக்க வழிவகை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அவரிடம் அளித்தனர்.
அனைத்து மனுக்களையும் பெற்றுக் கொண்ட அவர் அனைத்து சங்க பிரதிநிதிகளிடம் சிறப்புரை ஆற்றினார். கைத்தறி நெசவிற்காக பல்வேறு காலகட்டங்களில் அ.தி.மு.க. அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும், மக்கள் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் அ.தி.மு.க. அரசு செயல்பட்டதாகவும் கூறினார். அரசுக்கு வருவாய் முக்கியம் என்றும் அதேபோல் அனைத்து வரிகளும் முக்கியம் தான் என்றும் ஆனால் வரிகள் விதிக்கும் பொழுது வியாபாரிகள் தாக்குப் பிடிக்கும் அளவிற்கு வரி விதிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
தொழில் செய்பவர்களுக்கு பாதுகாப்பாகவும் அவர்கள் தாக்குப் பிடிக்கும் அளவிற்கு வரிகளை விதித்து அரசு காப்பாற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்ட அவர் பல்வேறு சோதனைகளை அ.தி.மு.க. அரசு சந்தித்து கடுமையான வறட்சியிலும் வேளாண் மக்களுக்கு வறட்சி நிவாரணம் வழங்கியதை சுட்டிக்காட்டி பேசிய அவர், விவசாயம் தொழில் ஆகிய இரண்டும் இரு சக்கரம் போல என்றும் கூறினார்.
கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் 7 அரசு சட்டக் கல்லூரிகள், 17 மருத்துவக் கல்லூரிகள் தமிழ்நாட்டிற்கு வந்ததாகவும், தமிழ்நாட்டில் 6 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதாகவும் கூறினார். 2020-21 ஆண்டைக் காட்டிலும் 2024-25 ஆண்டில் திமுக ஆட்சியில் 1லட்சத்து 36 ஆயிரம் கோடி கூடுதல் வருவாய் உள்ளதாகவும் ஆனால் தற்பொழுது பெறப்படும் கடன் தொகையை சேர்த்து 5 லட்சத்து 38 ஆயிரம் கோடி கடந்த 5 ஆண்டுகளில் கடன் பெற்றுள்ளதாகவும் கூறினார்.திமுக தற்பொழுது வைத்துள்ள கடனை கூடுதல் வரி செலுத்தி தான் கடனை தீர்க்க முடியும் என்று சுட்டிக்காட்டி பேசியவர் விவசாயிகள் எளிய முறையில் கடன் பெற வழிவகை செய்யப்படும் என்றும் உறுதியளித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


