முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகக் கோப்பை: அமெரிக்கா தகுதி

சனிக்கிழமை, 16 ஆகஸ்ட் 2025      விளையாட்டு
America 2024-05-15

Source: provided

16 அணிகள் பங்கேற்கும் யு19 ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை அடுத்த ஆண்டு ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெற உள்ளது . இந்த நிலையில் , 2026 யு19 உலககோப்பை தொடருக்கு அமெரிக்கா அணி தகுதி பெற்றுள்ளது . ஏற்கனவே 15 அணிகள் தகுதி பெற்றுள்ள நிலையில் 16வது அணியாக அமெரிக்கா தகுதி பெற்றுள்ளது. ஜார்ஜியாவின் ரைடலில் நடைபெற்ற தகுதிச் சுற்றில் கனடா, பெர்முடா அர்ஜென்டினாவை வீழ்த்தி அமெரிக்கா தகுதி பெற்றுள்ளது.

யு19 உலககோப்பை தொடருக்கு தகுதி பெற்ற அணிகள்: ஜிம்பாப்வே, ஆஸ்திரேலியா, வங்காளதேசம் , இங்கிலாந்து, இந்தியா, அயர்லாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் , , தன்சானியா, ஆப்கானிஸ்தான், ஜப்பான் , ஸ்காட்லாந்து , அமெரிக்கா. 

_______________________________________________________________________________________________________

சேவாக் பகிர்ந்த அதிர்ச்சி தகவல்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி தொடக்க ஆட்டாக்காரர் சேவாக். அப்படிப்பட்ட அவர் கடந்த 2008-ம் ஆண்டே ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று விடலாம் என்று நினைத்ததாக அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். ஆனால் சச்சின் தெண்டுல்கர்தான் அறிவுரை கூறி தனது கெரியரை காப்பாற்றி விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக பேசிய அவர் கூறுகையில், “ஆஸ்திரேலியாவில் 2007-08ல் நடைபெற்ற காமன்வெல்த் தொடரில், நான் முதல் மூன்று (ஐந்து) போட்டிகளில் விளையாடினேன். பின்னர் எம்.எஸ். தோனி என்னை அணியிலிருந்து நீக்கினார். அதன் பிறகு சிறிது காலம் நான் தேர்வு செய்யப்படவில்லை. பிளேயிங் லெவனில் எப்போது வாய்ப்பு கிடைக்கவில்லையோ அப்போதே இனி ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடுவதில் எந்த அர்த்தமும் இல்லை என்று ஓய்வு பெற முடிவு செய்தேன்.

பின்னர் நான் சச்சின் தெண்டுல்கரிடம் சென்று, 'நான் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது பற்றி யோசித்து வருகிறேன்' என்று சொன்னேன். அவர் என்னிடம், 'இல்லை, 1999-2000 ஆம் ஆண்டுகளில் இதேபோன்ற ஒரு கட்டத்தை நான் கடந்து வந்தேன், அப்போது நான் கிரிக்கெட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அந்த மோசமான காலகட்டம் கடந்து போனது. எனவே, நீங்கள் ஒரு கடினமான கட்டத்தை கடந்து செல்கிறீர்கள், ஆனால் அது கடந்து போகும். நீங்கள் உணர்ச்சிவசப்படும்போது எந்த முடிவும் எடுக்காதீர்கள். உங்களுக்கு சிறிது நேரம் கொடுத்து 1-2 தொடர்களில் பாருங்கள் பின்னர் ஒரு முடிவை எடுங்கள்' என்று சொன்னார்.

_______________________________________________________________________________________________________

தொடரை வென்றது ஆஸ்திரேலியா

மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது . இதில் முதலாவது ஆட்டத்தில் 17 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவும், 2-வது ஆட்டத்தில் 53 ரன் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றன. இந்த நிலையில் இந்த தொடரின் முடிவை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி போட்டி கெய்ன்ஸ் நகரில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் மிட்சேல் மார்ஷ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி தென் ஆப்பிரிக்கா அணி முதல் பேட்டிங் செய்தது. தொடக்கத்தில் மார்க்ரம் ஒரு ரன்களில் ஆட்டமிழந்தார். 

பின்னர் ரியான் ரிகேல்டன் 13 ரன்களிலும் , லுவான் பிரிட்டோரியஸ் 24 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் 173 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. தொடகக் வீரரான கேப்டன் மிட்செல் மார்ஷ் 37 பந்தில் 54 ரன்கள் விளாசி, சிறப்பான அடித்தளம் அமைத்துக் கொடுத்தார்.அதன்பின் மளமளவென விக்கெட் சரிந்தது. ஆனால் மேக்ஸ்வெல் அபாரமான ஆட்த்தை வெளிப்படுத்தினார். இதனால் ஆஸ்திரேலியா 19.5 ஓவரில் 173 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில்வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தொடரை 2-1 என ஆஸ்திரேலியா கைப்பற்றியது.மேக்ஸ்வெல் 36 பந்தில் 8 பவுண்டரி, 2 சிக்சருடன் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து