முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நோபல் பரிசுக்கு டிரம்பின் பெயரை பரிந்துரைப்பேன்: ஹிலாரி கிளிண்டன்

சனிக்கிழமை, 16 ஆகஸ்ட் 2025      உலகம்
hillary clinton4

நியூயார்க், நேர்மையாக சொல்ல வேண்டும் என்றால் நோபல் பரிசுக்கு நான் டிரம்ப் பெயரை பரிந்துரைப்பேன் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டன் அளித்த பேட்டியில் கூறியதாவது:- நேர்மையாக சொல்ல வேண்டும் என்றால் நோபல் பரிசுக்கு நான் டிரம்ப் பெயரை பரிந்துரைப்பேன். ரஷியா-உக்ரைன் இடையேயான போரை டிரம்பால் முடிவுக்குக் கொண்டுவர முடிந்தால் அவரை பாராட்டுவேன். உக்ரைனை அதன் பிரதேசத்தை ரஷியாவிடம் விட்டுக்கொடுக்க வேண்டிய நிலையில் வைக்காமல் அந்த போரை முடிவுக்குக் கொண்டுவர முடிந்தால் டிரம்பின் பெயரை நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்வேன். ஒரு போர் நிறுத்தம் இருக்க வேண்டும். ரஷியாவிற்கும் உக்ரைனுக்கும் இடையில் எந்தப் பிரதேசப் பரிமாற்றமும் இருக்க கூடாது. இதை புதினுக்கு தெளிவுபடுத்த அலாஸ்கா உச்சிமாநாடு ஒரு வாய்ப்பாக டிரம்புக்கு இருக்கலாம்.

போரை அவர் முடிவுக்கு கொண்டு வர இதுவே சரியான தருணம். அங்கு ஒரு குண்டு வீசும் சத்தம் கூட கேட்கக்கூடாது. போர் விவகாரத்தில் புதினுக்கு எவ்வித முக்கியத்துவமும் கிடைத்துவிடக்கூடாது என்பதே எனது குறிக்கோள் என்றார்.

2016-ம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பை எதிர்த்து போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து