Idhayam Matrimony

மகாராஷ்டிர கவர்னராக குஜராத் கவர்னருக்கு கூடுதல் பொறுப்பு: ஜனாதிபதி மாளிகை அறிவிப்பு

வியாழக்கிழமை, 11 செப்டம்பர் 2025      இந்தியா
Central-government 2021 12-

மும்பை, குஜராத் மாநில கவர்னர் ஆச்சார்ய தேவவிரத், மகாராஷ்டிர கவர்னர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என்று ஜனாதிபதி மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மகாராஷ்டிர கவர்னராக இருந்த சி.பி. ராதாகிருஷ்ணன், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த செப்.9-ம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவில் அவர் 452 வாக்குகளைப் பெற்று குடியரசு துணைத் தலைவராகத் தேர்வாகியுள்ளார். அவருக்கு எதிராக இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட பி. சுதர்சன் ரெட்டி 300 வாக்குகளைப் பெற்றார்.

குடியரசு துணைத் தலைவராகத் தேர்வானதால், சி.பி. ராதாகிருஷ்ணன் தனது மகாராஷ்டிர கவர்னர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார். இதையடுத்து குஜராத் கவர்னருக்கு மகாராஷ்டிர கவர்னர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. குஜராத் மாநில கவர்னர் ஆச்சார்ய தேவவிரத், மகாராஷ்டிர கவர்னர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என்று ஜனாதிபதி மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆச்சார்ய தேவவிரத் முதலில் குஜராத் மாநில கவர்னராகவும் பின்னர் ஹிமாசலப் பிரதேச கவர்னராகவும் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து