Idhayam Matrimony

கர்நாடகாவில் விநாயகா் சிலை ஊா்வல விபத்தில் 9 போ் பலி : பிரதமர் மோடி இரங்கல் - நிவாரணம் அறிவிப்பு

சனிக்கிழமை, 13 செப்டம்பர் 2025      இந்தியா
Accident-1

Source: provided

புதுதில்லி : கா்நாடக மாநிலம், ஹசன் மாவட்டத்தில் நடைபெற்ற விநாயகா் சிலை ஊா்வலத்தில் வேன் மோதி ஏற்பட்ட விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை இரங்கல் தெரிவித்திருப்பதுடன் ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

விநாயகா் சதுா்த்தி கொண்டாட்டத்தின் கடைசி நாளையொட்டி, கா்நாடக மாநிலம், ஹசன் மாவட்டம் மொசலே ஹொசஹள்ளி கிராமத்தில் வெள்ளிக்கிழமை இரவு விநாயகா் சிலை ஊா்வலம் நடைபெற்றது. அப்போது ஒரு வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஊா்வலத்தில் பங்கேற்றவா்கள் மீது மோதியது.

இந்த விபத்தில் வேனின் சக்கரத்துக்கு அடியில் சிக்கி 4 போ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். பலத்த காயமடைந்த 24 போ் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அவா்களில் 5 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். உயிரிழந்தோரில் எட்டு பேர் 17-25 வயதுக்குட்பட்டவர்கள், 55 வயதுக்கு மேற்பட்ட ஒருவர். 6 பேர் அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள், 3 பேர் பொறியியல் மாணவா்களாவா்.

இந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்து மாநில முதல்வா் சித்தராமையா, ‘விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். காயமடைந்தவா்களுக்கான சிகிச்சை கட்டணத்தை மாநில அரசே ஏற்கும்’ என்றாா்.

இந்நிலையில், ஹசன் மாவட்டத்தில் நடைபெற்ற விநாயகா் சிலை ஊா்வலத்தில் வேன் மோதி ஏற்பட்ட விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை இரங்கல் தெரிவித்திருப்பதுடன் ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், “ கர்நாடகம் மாநிலம் ஹசன் மாவட்டத்தில் விநாயகா் சிலை ஊா்வலத்தில் வேன் விபத்தில் 9 பேர் பலியான சம்பவம் மனதை வருத்தமடைய செய்துள்ளது. இந்த துயரமான நேரத்தில், பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆழந்த இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.

மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 வழங்கப்படும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து