முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிஸ் திரைவிமர்சனம்

திங்கட்கிழமை, 22 செப்டம்பர் 2025      சினிமா
Kiss-Review 2025-09-22

Source: provided

நாயகன் கவினுக்கு ஒரு விசித்திர ஆற்றல் உள்ளது. காதலர்களோ கனவன் மனைவியோ முத்தம் கொடுப்பதை பார்த்துவிட்டால், அவர்களுக்கு எதிர்காலத்தில் என்ன நடக்கப் போகிறது என்பதை அறிந்து கொள்வதே அந்த ஆற்றல். ஒரு கட்டத்தில் கவினுக்கும் நாயகி ப்ரீத்திக்கும் காதல் மலர, இருவரும் காதலை சொல்லிக் கொள்ளாத நிலையில், ப்ரீத்தி திடீரென்று கவினுக்கு முத்தக் கொடுத்து விடுகிறார். இதனால் எதிர்காலத்தில் என்ன நடக்கப் போகிறது என்பதை அறிந்துக் கொள்ளும் கவின் அடுத்து என்ன செய்யப் போகிறார் என்பதை சொல்லும் படமே கிஸ். கவின் தனது நடிப்பில் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளார் என்பதை இப்படத்தின் மூலம் அறியலாம். நாயகி ப்ரீத்தி அஸ்ரானி, அழகாகவும் சிறப்பாகவும் நடித்து பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கிறார். ஆர்.ஜே விஜய், விடிவி கணேஷ், ராவ் ரமேஷ், தேவயானி, பிரபு, கெளசல்யா ஆகியோரது நடிப்பு திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறது. ஜென் மார்டின் இசை மற்றும் பாடல்கள் ஓகே ரகம். நடன இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன் இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் இப்படத்தில் முதல் பாதியைவிட இரண்டாம் பாதியில் நிகழும் சம்பவங்கள் காமெடியில் களை கட்டுகிறது. மொத்தத்தில் படத்தை ஒரு முறை பார்க்கலாம். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து