எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
நக்சலைட்டுகள் தீவிரவாதிகள், போராளிகள் என்று அறியப்பட்டாலும், உண்மையில் அவர்கள் வலியோரால் வஞ்சிக்கப்பட்ட பழங்குடியினர் என்பதையும், ஆட்சியாளர்கள் மற்றும் அதிகார வர்க்கத்தினரின் மோசடியால் அவர்கள் எப்படி பலி கொடுக்கப்பட்டார்கள், என்ற உண்மையையும் சொல்லும் படந்தான் தண்டகாரண்யம்’. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதி கிராமத்தைச் சேர்ந்த தினேஷ், மனைவி ரித்விகா, தம்பி கலையரசன், அப்பா, அம்மா என்று குடும்பமாக வசித்து வருகிறார். வனத்துறையில் தற்காலிக காவலராக பணியாற்றி வரும் கலையரசனை மத்திய அரசு உருவாக்கிய சிறப்பு பாதுகாப்பு படையில் பணிக்கு சேர்த்து விடுகிறார். அந்த இடத்திற்கு வருபவர்கள் உயிரோடு எங்கும் செல்ல முடியாது என்ற உண்மையை தெரிந்துக் கொள்கிறார். அதன் பின்னணியில் நிகழ்த்தப்பட்ட ஒரு கொடூர நிகழ்வை நம் கண் முன் நிறுத்தும் வகையில் சொல்வதே ‘தண்டகாரண்யம்’. தினேஷ் மற்றும் கலையரசன் பழங்குடியின மக்களை பிரதிபலிக்கும் கதாபாத்திரங்களாக சிறப்பான நடிப்பைக் கொடுத்துள்ளனர். சபீர் கல்லரக்கல், பாலசரவணன், ரித்விகா, வின்சு சாம், அருள்தாஸ், முத்துகுமார், யுவன் மயில்சாமி என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள். ஜஸ்டின் பிரபாகரனின் இசை சிறப்பு. எழுதி இயக்கியிருக்கும் அதியன் ஆதிரை, இதுவரை சொல்லப்படாத ஒரு கதையை அழுத்தமாகவும், உணர்வுப்பூர்வமாகவும் சொல்லியிருக்கிறார்.
மொத்தத்தில், தண்டகாரண்யம் இயக்குனரின் தைரியமான படைப்பு.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


