முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம் ஒரு திருப்புமுனை பிரதமர் நெதன்யாகு தகவல்

வியாழக்கிழமை, 9 அக்டோபர் 2025      உலகம்
Nethanyagu 2025-10-09

Source: provided

இஸ்ரேல்: இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம் முக்கிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

வலுவான ராணுவ நடவடிக்கையாலும், நண்பர் டிரம்பின் மகத்தான முயற்சிகள் மூலம் முக்கிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். முதல் கட்டமாக அனைத்து பிணைக் கைதிகளும் வீட்டுக்கு அழைத்து வரப்படுவார்கள் என்றும், இஸ்ரேலுக்கு கிடைத்த தார்மீக வெற்றி என்றும் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேல் ராணுவத்துக்கும், ஹமாஸ் படையினருக்கும் இடையே 2 ஆண்டுகளைக் கடந்து போர் நடைபெற்று வந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் 20 அம்ச திட்டத்தை ஏற்று, இரு தரப்பினரும் முதல்கட்டப் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எக்ஸ் தளத்தில் தெரிவித்திருப்பதாவது:-

முதல் கட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் மூலம், எங்கள் அனைத்து பிணைக் கைதிகளும் வீடு திரும்புவார்கள். இது இஸ்ரேலுக்கு கிடைத்த தார்மீக வெற்றியாகும். அனைத்து பிணைக் கைதிகளும் திரும்பும் வரை மற்றும் எங்கள் அனைத்து இலக்குகளும் அடையும் வரை நாங்கள் ஓயமாட்டோம் என நான் தெளிவாகக் கூறியிருந்தேன். உறுதியான தீர்மானம், வலிமையான ராணுவ நடவடிக்கைகள் மற்றும் எங்கள் நெருங்கிய நண்பர் அதிபர் டிரம்பின் மகத்தான முயற்சிகள் மூலம், இந்த முக்கியமான திருப்புமுனையை அடைந்துள்ளோம்.

தலைமைத்துவம், கூட்டாண்மை, இஸ்ரேலின் பாதுகாப்பு மற்றும் எங்கள் பிணைக் கைதிகளின் சுதந்திரத்திற்கு அதிபர் டிரம்பின் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் எங்கள் கூட்டணியை கடவுள் ஆசீர்வதிக்கட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து