முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓய்வு குறித்து அஸ்வின் விளக்கம்

வியாழக்கிழமை, 9 அக்டோபர் 2025      விளையாட்டு
Ashwin 2025-10-09

Source: provided

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆர்.அஸ்வின் தான் ஓய்வு பெற்றது தனிப்பட்ட விஷயம் என்றும் தன்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை என்றும் கூறியுள்ளார். பார்டர் - கவாஸ்கர் டிராபியில் பாதியிலேயே அஸ்வின் வெளியேறியது சர்ச்சையைக் கிளப்பியது. தமிழகத்தைச் சேர்ந்த ஆர்.அஸ்வின் (39 வயது) இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து கடந்த டிசம்பரில் ஓய்வை அறிவித்தார். பிளேயிங் லெவனின் வாய்ப்பு மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் ஓய்வு பெற்றதாக அப்போது தகவல் மூலம் தெரியவந்தது.

சமீபத்தில் ஐபிஎல் தொடரிலும் ஓய்வை அறிவித்த அவர் பிபிஎல் தொடரில் விளையாடுகிறார். இந்நிலையில், தனது யூடியூப் சேனலில் இது குறித்து அஸ்வின் பேசியதாவது: இந்திய அணியில் இடமில்லை என்றோ ஓய்வு பெற்று விடு என்றோ என்னை யாரும் சொல்லவில்லை. உண்மையில் நான் ஓய்வு பெறுகிறேன் என்று சொல்லும்போது 2-3 நபர்கள் ’வேண்டாம்; இன்னும் கூடுதலாக விளையாடு’ என்றே கூறினார்கள். கேப்டன் ரோஹித் சர்மா, கௌதம் கம்பீரும் மீண்டும் ஒருமுறை யோசி எனவும் கூறினார்கள். ஆனால், எனது ஓய்வு பற்றி அஜித் அகர்கரிடம் பெரிதாக பேசவில்லை. ஓய்வு பெற்றதில் எனது தனிப்பட்ட முடிவுதான் காரணம். யாரும் வற்புறுத்தவில்லை எனக் கூறினார்.

டிக்கெட் விற்பனை தேதி அறிவிப்பு

நவம்பர் மாதத்தில் நடைபெறும் நட்பு ரீதியான போட்டியில் விளையாட ஆர்ஜென்டீன அணி கேரளத்துக்கு வருகிறது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியுடன் மோதவிருக்கிறது. இதற்கான டிக்கெட் விற்பனை வரும் அக்டோபர் 15ஆம் தேதி தொடங்குகிறது. இந்த டிக்கெட்டுகளின் விலை குறித்து விரைவில் அறிவிக்கப்படுமென போட்டி ஏற்பட்டாளர்கள் தெரிவித்துள்ளார்கள். இந்த டிக்கெட்டுகளின் விலை தோராயமாக ரூ.3,500 முதல் ரூ.10 லட்சம் வரையிலான வகைமைகளில் இருக்குமென தகவல்கள் தெரிவிக்கின்றன.

நவம்பர் 14ஆம் தேதி கொச்சிக்கு வரும் மெஸ்ஸி, நவ.17ஆம் தேதி நேரு திடலில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாட இருக்கிறார்.  கோழிக்கூட்டில் மெஸ்ஸி சாலை வலம் வருவது, கொச்சியில் ரசிகர்களைச் சந்திப்பது குறித்த நிகழ்வுகள் தற்போது பரிசீலித்து வருவதாகவும் இன்னும் உறுதிப்படுத்தவில்லை எனவும் கூறப்படுகிறது. கொச்சியின் ஜிசிடிஏ 60,000 பார்வையாளர்கள் பங்கேற்கும்படி திடலை தயார்படுத்தி வருகிறது. ஐஎஸ்எல் போட்டிகளுக்கே 35,000- 40,000 பார்வையாளர்கள் மட்டுமே இருக்கும்படி அமைக்கப்படிருந்த இந்தத் திடலில் தற்போது இருக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மெஸ்ஸி தனது சொந்த மண்ணில் உலகக் கோப்பை போட்டிக்கான தகுதிச் சுற்றில் கடைசியாக விளையாடிதால் அவர் விரைவில் ஓய்வு பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறந்த இன்னிங்ஸ்: ஆஸி. கேப்டன்

ஆஸி. மகளிரணியின் அபாரமான வெற்றிக்கு வித்திட்ட பெத் மூனியின் இன்னிங்ஸ்தான் தான் பார்த்ததிலேயே மிகச்சிறந்த இன்னிங்ஸ் என ஆஸி. கேப்டன் அலீஸா ஹீலி தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் மகளிரணிக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் ஆஸி. அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸி. அணி ஒரு கட்டத்தில் 77 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அங்கிருந்து 221 ரன்களாக மாற பெத் மூனி (109) மற்றும் அலானா கிங் (51*) உதவினார்கள்.

இந்தப் போட்டி குறித்து ஆஸி. கேப்டன் அலீஸா ஹீலி கூறியதாவது: இரண்டு புள்ளிகள் கிடைத்தன. நாங்கள் அடுத்த போட்டிக்குச் சென்றுவிடுவோம். பெத் மூனி விளையாடி, நான் பார்த்ததிலேயே மிகச் சிறந்த இன்னிங்ஸ் இதுதான் என்பேன். நான் என் கிரிக்கெட் வாழ்நாளில் பெத் மூனியின் பேட்டிங்கை கவனித்து வருகிறேன். இதுவரை நான் பார்த்ததிலேயே மிகச் சிறந்த இன்னிங்ஸை அவர் விளையாடியுள்ளார். அதனால் அவருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். ஒரு கட்டத்தில் 150-160 ரன்கள் மட்டுமே எடுப்போம் என்றிருந்தது. அதைக் கட்டுப்படுத்துவது கடினம். 200 ரன்களைக் கடக்க மூனியும் அலானாவும் உதவினார்கள். சில நேரங்களில் பிட்ச் திடீரென மாறுகிறது. இனிமேல் பிட்ச்களுக்கு ஏற்ப விரைவாகவே நாங்கள் தகவமைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

ரூ.58 கோடியை நிராகரித்த வீரர்கள்

இந்திய அணி இந்த மாத இறுதியில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் வரும் 19-ம் தேதியும், டி20 தொடர் வரும் 29-ம் தேதியும் தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து, இந்தியாவுக்கு எதிராக விளையாடும் ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. அதில், அணியின் கேப்டனாக மிட்செல் மார்ஷ் தொடர்கிறார். ஆனால் அந்த அணியின் நட்சத்திர வீரர்களான பாட் கம்மின்ஸ், கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் காயத்தால் தொடரில் இருந்து விலகினர்.

இதற்கிடையே, தங்கள் அணிக்காக வெவ்வேறு டி20 போட்டிகளில் விளையாட ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர்கள் பாட் கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட் ஆகியோரை ஐ.பி.எல். அணி ஒன்று அணுகியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகி தங்களுக்காக மட்டும் விளையாடினால் தலா 58 கோடி ரூபாய் தருவதாக ஐ.பி.எல். அணி ஒன்று தந்த சலுகையை ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட் நிராகரித்து விட்டதாக தகவல் வெளியானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து