முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திண்டுக்கல் மாவட்டத்தில் 5,478 பயனாளிகளுக்கு ரூ.61.45 கோடியில் நலத்திட்ட உதவிகள்: துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்

வியாழக்கிழமை, 9 அக்டோபர் 2025      தமிழகம்
Udhayanidhi 2025-10-09

Source: provided

சென்னை: 5,478 பயனாளிகளுக்கு ரூ.61.45 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். மேலும், 39 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, 23 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நேற்று (9.10.2025) திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில் ரூ.7.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட வேடசந்தூர் அரசு மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு புதிய கட்டடம் உள்பட ரூ. 28.14 கோடி மதிப்பீட்டிலான 39 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, ரூ. 49.59 கோடி மதிப்பீட்டிலான 23 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 5,478 பயனாளிகளுக்கு ரூ. 61.45 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இவ்விழாவில், தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியத்தில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு திட்டம் மற்றும் நபார்டு திட்டத்தின்கீழ் ரூ. 7.96 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 14 பள்ளி கட்டிடங்கள், வடமதுரை ஊராட்சி ஒன்றியத்தில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு திட்டம், முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின்கீழ் ரூ. 5.12 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 8 பணிகள், வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 3.66 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 14 பணிகள் மற்றும் பொதுப்பணித்துறை மூலம் வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் ரூ. 7.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு புதிய கட்டடம், வேடசந்தூரில் ரூ. 1.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட காமராஜர் பேருந்து நிலைய கட்டடம், வேடசந்தூர் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் ரூ. 2.65 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 16 வகுப்பறை கட்டடங்கள் என மொத்தம் ரூ. 28.14 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற 39 திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 50 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 1,01,800 வீதம் மொத்தம் ரூ. 50.90 லட்சம் மதிப்பீட்டிலான மோட்டார் பொருத்திய மூன்று சக்கர வாகனங்களையும், வேளாண்மைத்துறையின் சார்பில் 20 பயனாளிகளுக்கு 

ரூ. 1.94 லட்சம் மதிப்பீட்டிலான விதைத் தொகுப்புகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும், வேளாண்மைப் பொறியியல் துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ. 13.04 லட்சம் மதிப்பீட்டில் மின் மோட்டார் பம்பு செட், சோலார் பம்பு செட் உள்ளிட்ட நலத்திட்டங்களையும், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் 500 பயனாளிகளுக்கு ரூ. 5 லட்சம் வரை சிகிச்சை பெறுவதற்கான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டைகளையும் என மொத்தம் 5,478 பயனாளிகளுக்கு ரூ. 61.45 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

இந்த விழாவில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி, கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, நாடாளுமன்ற உறுப்பினர் செ.ஜோதிமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் இ.பெ.செந்தில்குமார், ச.காந்திராஜன், மாவட்ட ஆட்சித்தலைவர் செ.சரவணன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து