Idhayam Matrimony

அயோத்தி ராமர் கோவிலில் நிர்மலா சீதாராமன் வழிபாடு

வியாழக்கிழமை, 9 அக்டோபர் 2025      இந்தியா
Nirmala-seetharam 2025-10-09

Source: provided

டெல்லி: உத்தரப்பிரதேசத்தில் ராமர் கோவிலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குடும்பத்துடன் வழிபாடு நடத்தினார்.

இரண்டு நாள் பயணமாக புதன்கிழமை அயோத்தி வந்த நிர்மலா சீதாராமன், ராமரின் ஆரத்தி பூஜையிலும், ராம தர்பார் மற்றும் துர்கா தேவியின் சன்னதியிலும் வழிபாடு நடத்தினார். கோவில் வளாகத்தில் உள்ள குபேர் திலாவில் சிவபெருமானுக்கு 'அபிஷேகம்' செய்ததாகவும் ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய், நிதியமைச்சருடன் சென்று கோவில் வளாகத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்து அவருக்கு விளக்கினார். முன்னதாக நேற்று முன்தினம் அயோத்தியில் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமிகள், கர்நாடக இசை முன்னோடிகளில் ஒருவரான அருணாசல கவிராயர், கர்நாடக இசையின் பிதாமகர் எனப் போற்றப்படும் புரந்தரதாசர் ஆகியோரின் சிலைகள் பிரஹஸ்பதி குண்ட் பகுதியில் அமைக்கப்பட்ட சிலைகள் திறக்கப்பட்டன. இந்த நிகழ்வில் முதல்வர் யோகி ஆதித்யநாத் உடன் நிர்மலா சீதாராமன் சிலைகளுக்கு மரியாதை செலுத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து