Idhayam Matrimony

ஜம்மு-காஷ்மீர் மாயமான 2 ராணுவ வீரர்களை தேடும் பணி தீவிரம்

வியாழக்கிழமை, 9 அக்டோபர் 2025      இந்தியா
Jammu-Kashmir 2025-10-09

Source: provided

ஜம்மு: பயங்கரவாதிகளை தேடும் வேட்டையில் ஈடுபட்டு வந்த இரண்டு பாதுகாப்புப்படை வீரர்கள் மாயமான நிலையில், அவர்கள் தேடும் பணியில் சக வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் பகுதியில் இந்தியா- பாகிஸ்தான் எல்லை வழியாக ஊடுருவும் பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியில் பாதுகாப்புப்படை வீரர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இரண்டு நாட்களுக்கு முன்னதாக கோகேர்நாக்கில் உளள் அஹ்லான் கடோல் என்ற பகுதியில் தேடுதல் வேட்டையில் வீரர்கள் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது இரண்டு வீரர்கள் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு மாயமானார்கள். இருவரையும் தேடும் பணியில் ஹெலிகாப்டர் உட்படுத்தப்பட்டுள்ளது. காஷ்மீரில் அஹ்லான் கடோல், பயங்கரவாதத்தின் முக்கிய மையமாக மாறியுள்ளது. இந்த இடத்தில் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மற்றும் ஆகஸ்ட் 2024 ஆகிய இரண்டு முறை பெரிய அளவில் என்கவுண்டர் நடைபெற்றுள்ளது. கடந்த வரும் நடைபெற்ற சண்டையில் இரண்டு வீரர்கள் மற்றும் ஒரு உள்ளூர் நபர் கொல்லப்பட்டனர். அடர்ந்த காட்டுப் பகுதியில் பயங்ரவாதிகளை தேடும்போது இரண்டு அதிகாரிகள் உள்பட நான்கு வீரர்கள், ஒரு போலீஸ்காரர் கொல்லப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து