எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மதுரை: இந்திய கிரிக்கெட் நட்சத்திர வீரராக திகழ்ந்தவரும்,முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி நேற்று, ரூ.325 கோடி செலவில் மதுரையில் அமைந்துள்ள வேலம்மாள் கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிவேலம்மாள் கல்வி நிறுவனங்களின் தலைவர் எம்.வி.எம்.முத்துராமலிங்கம் முன்னிலையில் நடைபெற்றது.
சர்வதேச தர பீட்ச்...
உலகத் தரத்துக்கு இணையாக அமைக்கப்பட்ட இந்த மைதானம், இளம் விளையாட்டாளர்களுக்கான திறன்வள மேம்பாட்டிற்கு புதிய ஒளியாக திகழ்கிறது. இதில் சர்வதேச தர பீட்ச், இரவைப் பகலாக்கும் விளக்குகள்,பகல் இரவு ஆட்டங்களுக்கான , ஆட்டக்காரர்களுக்கான நவீன அறைகள், டிஜிட்டல் ஸ்கோர் போர்டு, பயிற்சி வலைகள், உடற்பயிற்சி கூடம், மீடியா மற்றும் வி.ஐ.பி. கேலரிகள், மேலும் பெரிய அளவிலான பார்வையாளர் இருக்கைகள் ஆகிய வசதிகள் உள்ளன.மழை பெய்தாலும் அடுத்த 10 நிமிடங்களில் மைதானம் விளையாடுவதற்கு தகுந்தாற் போல காய்ந்துவிடும் வகையில் நவீன தொழில்நுட்பத்தில் இந்த மைதானம் உருவாக்கப்பட்டுள்ளது.
கனவுத் தளமாக...
இந்நிகழ்ச்சியில் எம்.எஸ்.தோனி பேசியதாவது, இப்படிப்பட்ட உலகத் தரம் வாய்ந்த வசதிகளைக் கொண்ட வேலம்மாள் கிரிக்கெட் மைதானம் , எதிர்கால கிரிக்கெட் வீரர்களின் கனவுத் தளமாக விளங்கப் போகிறது என்றார். மேலும் வேலம்மாள் தலைவர் எம்.வி.எம். முத்துராமலிங்கம் பேசியதாவது-இந்த மைதானம் தோனி போன்ற உலக கிரிக்கெட் ஜாம்பவவான் திறந்து வைப்பது எங்களுக்கு பெருமையாக உள்ளது. திறமைக்கு தளம் அமைத்துத்தரும் எங்கள் நோக்கை இது இன்னும் உயர்த்துகிறது. மேக்கிங் சாம்பியன் என்ற நோக்கத்தில் செயல்படும் வேலம்மாள் நிறுவனம், இன்று விளையாட்டு உலகிலும் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது என்றார்.
2-வது பெரிய அரங்கு...
சென்னை சேப்பாக்கத்திற்கு அடுத்து தமிழ்நாட்டின் 2-வது மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் இது தான். இதை இந்திய முன்னாள் கேப்டன் தோனி இன்று திறந்து வைக்கிறார். எதிர்காலத்தில் இங்கு டி.என்.பி.எல்., ஐ.பி.எல்., ரஞ்சி கிரிக்கெட் போன்ற போட்டிகள் நடக்க வாய்ப்புள்ளது. முன்னதாக நேற்று மதியம் மதுரை விமான நிலையத்துக்கு வந்த தோனியை வரவேற்க மதுரை விமான நிலையத்தில் குவிந்திருந்த ரசிகர்கள் அவரைப் பார்த்து தல... தல... என கோஷமிட்டு உற்சாக வரவேற்பளித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


