முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் இன்று தொடக்கம்: இந்தியா - மேற்கிந்திய அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி

வியாழக்கிழமை, 9 அக்டோபர் 2025      விளையாட்டு
Test

Source: provided

புதுடெல்லி: இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று முதல் டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியில் சில முக்கிய மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஜஸ்பிரிட் பும்ரா...

முதலாவது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடி இருந்தார் ஜஸ்பிரிட் பும்ரா. இந்நிலையில் ஆஸ்திரேலியா தொடருக்கு தயாராகும் விதத்தில் அவருக்கு 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு வழங்கப்படலாம். பும்ரா ஓய்வுக்கு சென்றால், அந்த இடத்தில் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா அணியில் சேர வாய்ப்பு உள்ளது. கடைசியாக ஆடிய இங்கிலாந்து தொடரில் பிரசித் சிறப்பாக பந்து வீசி இருந்தார். அவர் தனது வேகப்பந்து திறமையை 2வது டெஸ்ட் போட்டியில் கொண்டு வரலாம். மேலும், சிராஜ் ஓய்வு எடுத்து கொள்ளலாம் என்ற செய்திகளும் வருகிறது. அவரும் ஆஸ்திரேலியா தொடரில் இடம் பெற உள்ளதால் ஓய்வு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதனால் புதிய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.

மற்ற மாற்றங்கள்...

விக்கெட் கீப்பராக முதல் போட்டியில் சிறப்பாக விளையாடிய துருவ் ஜுரேல் தொடர்ந்து அணியில் விளையாடுவார். முதல் டெஸ்டில் கேப்டன் சுப்மன் கில் அரை சதம் அடித்து இருந்த நிலையில், சாய் சுதர்சனுக்கு பதில் தேவதத் படிக்கல் இடம் பெற வாய்ப்புள்ளது. ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் போன்ற ஆல் ரவுண்டர்கள் தொடர்ந்து விளையாட உள்ளனர். தமிழக வீரர் ஜெகதீசனுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்விகளும் உள்ளது. இந்த மாற்றங்கள் இந்திய அணிக்கு புதிய உயிர் ஊட்டமாக அமையும் என கருதப்படுகிறது. பழைய வீரர்களுக்கு ஓய்வளித்து, புதிய வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்தல் அணியின் ஆற்றலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்திய  உத்ததேச அணி:

யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், தேவ்தத் படிக்கல், ஷுப்மன் கில் (கேப்டன்), துருவ் ஜூரல் (வி.கீ), ரவீந்திர ஜடேஜா, நிதிஷ் குமார் ரெட்டி, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா

ரன் மழைக்கு வாய்ப்பு

டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தின் அவுட்பீல்டு விரைவாக இருக்கும். மேலும் எல்லைக்​கோட்டின் தூரமும் சற்றுகுறைவு. இதனால் பேட்ஸ்மேன்கள் ரன் மழை பொழியக்கூடும். கடைசியாக இங்கு 2023-ம் ஆண்டு நடைபெற்ற பார்டர்-கவாஸ்கர் டிராபியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதியிருந்தன. 3 நாட்களில் முடிவடைந்த இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில்​ தோல்விகண்டிருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து