முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெருங்கும் தீபாவளி பண்டிகை: விமான கட்டணங்கள் பல மடங்காக உயர்வு : சென்னையில் இருந்து மதுரைக்கு ரூ.17.683 கட்டணம்

வெள்ளிக்கிழமை, 17 அக்டோபர் 2025      தமிழகம்
Air-India

Source: provided

சென்னை : தீபாவளி பண்டிகையை கொண்டாட சிலநாட்களே உள்ள நிலையில், விமான கட்டணங்கள் பல மடங்காக உயர்ந்துள்ளது பயணிகளை அதிர்ச்சிகுள்ளாகியுள்ளது. சென்னையில் இருந்து மதுரைக்கு சாதாரண நாட்களில் ரூ.3,129-ஆக இருக்கும் கட்டணம் தற்போது ரூ.17,683 வரை உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வருகிற 20-ந்தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் வசிப்பவர்கள் பெரும்பாலானோர் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அதற்கு பேருந்து, ரெயில், விமானம் போன்ற போக்குவரத்து வசதியை பயன்படுத்துவார்கள். தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், பலரும் சொந்த ஊருக்கு கிளம்ப தொடங்கி உள்ள நிலையில் வழக்கத்தை விட விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளன. 

சென்னையில் இருந்து மதுரைக்கு சாதாரண நாட்களில் ரூ.3,129-ஆக இருக்கும் கட்டணம் தற்போது ரூ.17,683 வரை உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து திருச்சிக்கு சாதாரண நாட்களில் ரூ.3,608-ஆக இருக்கும் கட்டணம் தற்போது ரூ.15,233 வரை உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து கோவைக்கு சாதாரண நாட்களில் ரூ.4,351-ஆக இருக்கும் கட்டணம் தற்போது ரூ.17,158 வரை உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு சாதாரண நாட்களில் ரூ.3,608-ஆக இருக்கும் கட்டணம் தற்போது ரூ.17,053 வரை உயர்ந்துள்ளது.

சென்னையில் இருந்து டெல்லிக்கு சாதாரண நாட்களில் ரூ.5,933-ஆக இருக்கும் கட்டணம் தற்போது ரூ.30,414 வரை உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து மும்பைக்கு சாதாரண நாட்களில் ரூ.3,356-ஆக இருக்கும் கட்டணம் தற்போது ரூ.21,960 வரை உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து கொல்கத்தாவுக்கு சாதாரண நாட்களில் ரூ.5,293-ஆக இருக்கும் கட்டணம் தற்போது ரூ.22,169 வரை உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து ஐதராபாத்துக்கு சாதாரண நாட்களில் ரூ.2,926-ஆக இருக்கும் கட்டணம் தற்போது ரூ.15,309 வரை உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து கவுகாத்திக்கு சாதாரண நாள் ரூ.6,499-ஆக இருக்கும் கட்டணம் தற்போது ரூ.21,639 வரை உயர்ந்துள்ளதால் மக்கள் பெரிதும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து