முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்பிரிக்கன் பன்றிக்காய்ச்சல் பரவல் எதிரொலி: கேரளாவில் இருந்து பன்றிகள் கொண்டு வர தமிழகத்தில் தடை

செவ்வாய்க்கிழமை, 21 அக்டோபர் 2025      தமிழகம்
Kerala 2024-05-02

கோவை, கேரள மாநிலம் திருச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆப்பிரிக்கன் பன்றிக்காய்ச்சல் பரவல் உள்ளது. இதையடுத்து அண்டை மாநிலமான தமிழகத்தில் உள்ள கோவையில் ஆப்பிரிக்கன் பன்றிக்காய்ச்சல் நோய்பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் வேலந்தாவளம், வாளையாறு உள்ளிட்ட 12 எல்லையோர சோதனைச்சாவடிகளிலும் கால்நடை பராமரிப்புத்துறை குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கேரளாவில் இருந்து பன்றி இறைச்சி மற்றும் பன்றி தீவனம் ஏற்றி வரும் வாகனங்களை திருப்பி அனுப்ப அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

கோவை வழியாக கேரள பன்றி பண்ணைகளுக்கு தீவனம் உள்ளிட்டவற்றை ஏற்றி சென்று விட்டு திரும்பி வரும் வாகனங்களுக்கு சோதனைச்சாவடிகளில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. அதேபோல் கோவை மாவட்டத்தில் உள்ள பன்றி வளர்ப்பு பண்ணைகளும் தீவிரமாக கண்காணிப்பட்டு வருகின்றன. இதுகுறித்து கால்நடை பராமரிப்புததுறை அதிகாரிகள் கூறியதாவது:-

கோவையில் தற்போது வரை அதுபோன்ற காய்ச்சல் பாதிப்புகள் எதுவும் இல்லை. இருப்பிலும் கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூர் உள்பட சில இடங்களில் செயல்பட்டு வரும் பன்றி வளர்ப்பு பண்ணைகளை கண்காணித்து வருகிறோம். தற்போது பரவுவது ஏ.எஸ்.எப் வகை பன்றி காய்ச்சல் ஆகும். எனவே வளர்ப்பு பன்றிகளில் ஏதாவது மாற்றங்கள் தெரிந்தால் உடனடியாக கால்நடைத்துறைக்கு தகவல் அளிக்கும்படி பன்றி பண்ணை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து