முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாட்னா, காந்தி மைதானத்தில் விழா: பீகார் முதல்வராக இன்று நிதிஷ்குமார் பதவியேற்பு : பிரதமர் மோடி உள்ளிட்டோர் பங்கேற்பு

புதன்கிழமை, 19 நவம்பர் 2025      இந்தியா
nitish-kumar-1

Source: provided

பாட்னா : தலைநகர் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் நடைபெறும் விழாவில் பீகாரின் முதல்வராக நிதிஷ்குமார்10-வது முறையாக இன்று பதவியேற்கவுள்ளார். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி மற்றும் தே.ஜ.கூட்டணி முதல்வர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.

பீகார் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா கூட்டணி அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. முதல்வராக நிதிஷ்குமார் 10-வது தடவையாக பதவியேற்கிறார். இன்று (வியாழக்கிழமை) பதவியேற்பு விழா நடக்கிறது. பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் விழா நடக்கிறது. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் , பா.ஜனதா கூட்டணி முதல்வர்கள், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். பிரதமர் பங்கேற்பதால், காந்தி மைதானம், பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு இன்றுவரை அனுமதி கிடையாது.

நிதிஷ்குமார் நேற்று (புதன்கிழமை) தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அத்துடன், பீகார் சட்டசபையும் நேற்று கலைக்கப்பட்டது. பின்னர், எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் நிதிஷ்குமார், புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அமைச்சர் பதவியை கைப்பற்ற பா.ஜனதா கூட்டணி கட்சிகள் தீவிரமாக ஆதரவு திரட்டி வருகின்றன. பா.ஜனதாவுக்கு 16 அமைச்சர் பதவிகளும், ஐக்கிய ஜனதாதளத்துக்கு 14 அமைச்சர் பதவிகளும், லோக் ஜனசக்தி கட்சிக்கு 3 அமைச்சர் பதவிகளும், மற்ற கட்சிகளுக்கு தலா ஒரு அமைச்சர்  பதவியும் அளிக்கப்படுகின்றன. பா.ஜனதா தரப்பில் 5 புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிகிறது.

எந்த கட்சிக்கு எந்த இலாகா என்பது குறித்து டெல்லியில் பா.ஜனதா மேலிட தலைவர்களுக்கும், ஐக்கிய ஜனதாதளம் மூத்த தலைவர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதில், சபாநாயகர் பதவி எந்த கட்சிக்கு என்பதும் முக்கிய இடம்பிடித்துள்ளது. பதவிக்காலம் முடிவடைந்த சட்டசபையில் பா.ஜனதாவை சேர்ந்த நந்த கிஷோர் யாதவ் சபாநாயகராகவும், ஐக்கிய ஜனதாதளத்தை சேர்ந்த நரேந்திர நாராயணன் யாதவ் துணை சபாநாயகராகவும் இருந்தனர்.

ஆனால், தற்போது இரு கட்சிகளுமே சபாநாயகர் பதவியை எதிர்பார்க்கின்றன. பா.ஜனதா தரப்பில் பிரேம் குமார் பெயரும், ஐக்கிய ஜனதாதளம் தரப்பில் விஜய் சவுத்ரி பெயரும் பரிசீலிக்கப்படுகின்றன. இப்பிரச்சினையில் இழுபறி நீடித்து வருவதால், கருத்தொற்றுமை ஏற்படுத்த முயற்சி நடந்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து