Idhayam Matrimony

பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு கோவையில் கருப்புக்கொடி ஏந்தி விவசாயிகள் போராட்டம்

புதன்கிழமை, 19 நவம்பர் 2025      தமிழகம்
Modi 2024-12-02

Source: provided

கோவை : பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி ஏந்தி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

கோவை கொடிசியா வளாகத்தில் தமிழ்நாடு இயற்கை வேளாண்மை கூட்டமைப்பு சார்பில் நடைபெறவுள்ள தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைக்கிறார். இதற்காக ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் இருந்து விமானம் மூலம் நேற்று கோவை விமான நிலையத்திற்கு மோடி வந்தார். பிரதமர் மோடி வருகையையொட்டி 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 

இந்த நிலையில், பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கோவை வேளாண் மாநாட்டை புறக்கணித்து விவசாயிகள் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இயற்கை விவசாயத்திற்கு மானியம் இல்லை எனவும், இயற்கை வேளாண்மைக்கு முற்றிலும் எதிரான மரபணு மாற்றப்பட்ட நெல் விதைகளை இறக்குமதி செய்வதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.

மேலும் கோவை வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்புத் தெரிவித்து மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம் நடத்தினர். அதில் கோவை மெட்ரோ திட்டத்தை நிராகரித்த மோடிக்கு கோவையில் என்ன வேலை என முழக்கங்களை எழுப்பினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து