எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : மெட்ரோ ரயில் என்பது ஆடம்பரம் அல்ல அவசியமானது என்று தெரிவித்துள்ள அமைச்சர் தங்கம் தென்னரசு மதுரை, கோவை நகரங்களுக்கு இது அவசியமான உள்கட்டமைப்புத் தேவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மதுரை, கோயம்புத்தூர் நகரங்களுக்ககான மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்து, அதற்கான திட்ட விரிவாக்க அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பியிருந்தது. இந்த நிலையில் மத்திய அரசு விரிவான திட்ட அறிக்கையைக் கேட்டு அதனைத் திருப்பியனுப்பியிருக்கிறது.
இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழ்நாடு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:- மதுரையும், கோவையும் தமிழ்நாட்டின் பெருமைமிகு நகரங்கள். இவை இரண்டும் இந்தியாவின் வேகமாக வளரும் நகரங்களில் முக்கியமானவை. இந்நகரங்களுக்கு மெட்ரோ ரயில் என்பது ஆடம்பரம் அல்ல; அவசியமான உள்கட்டமைப்புத் தேவை.
மக்கள் நெருக்கடியைக் குறைப்பது, பொருளாதாரத்தை மேம்படுத்துவது, என அனைத்துக்கும் மெட்ரோ இன்றியமையாதது. ஒன்றிய பா.ஜ.க. அரசின் பாகுபாட்டை எதிர்த்து, தமிழ்நாடு மக்களின் நியாயமான உரிமைக்காகவும், எதிர்கால வளர்ச்சிக்காகவும் மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை வழங்கக் கோரி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுப்பிய குரலுக்கு முழு ஆதரவு தெரிவிப்போம் எனக் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


