எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : ஒட்டப்பிடாரம், ஆலங்குளம், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி தி.மு.க. நிர்வாகிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். அப்போது ஆலங்குளம் தெற்கு ஒன்றிய செயலாளரின் தந்தையிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் பேசி வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
தி.மு.க. தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், உடன்பிறப்பே வா என்ற தலைப்பில் சட்டமன்ற தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். அந்த வகையில், நேற்று ஒட்டப்பிடாரம், ஆலங்குளம், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார்.
அப்போது ஆலங்குளம் தொகுதிக்கு உட்பட்ட ஆலங்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் சிவக்குமாரை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசும்போது, “எங்க அப்பா 1967 லில் இருந்து தி.மு.க. உறுப்பினர் (முத்துவேல்). இப்பவும் டீக்கடையில் உட்கார்ந்து அரசியல் பேசிட்டு இருக்காரு. உங்க கூட போட்டோ எடுக்க கூட்டிட்டு வரவா எனக் சிவக்குமார் கேட்டுள்ளார்.
அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் உங்கள் தந்தைக்கு போன் பண்ணுங்க நானே பேசி வரச் சொல்லுறேன் என கூறியுள்ளார். உடனே ஒன்றிய செயலாளர் உடனே தந்தைக்கு தொலைபேசியில் அழைத்துள்ளார். அவரிடம் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- “வணக்கம் நான் ஸ்டாலின் பேசுகிறேன். உங்கள் மகன் ஆலங்குளம் தெற்கு ஒன்றிய செயலாளராக இருக்கிறார். அவருடன் நான் பேசினேன். என்னுடன் சேர்ந்து போட்டோ எடுக்க வேண்டும் என்று கூறினீர்களா..? சென்னை வாரீங்களா.. அறிவாலயத்துக்கு வாங்க போட்டோ எடுத்துக்கொள்ளலாம்” என்று பேசினார்.
அப்போது ஒன்றிய செயலாளர் சிவக்குமார் கண் கலங்கினார். இதனை பார்த்த முதல்வர் ஏன் அழுகிறீர்கள் என கேட்டார். பின்னர் தந்தையுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுவதைக் கண்டு ‘இது போதும்’ எனக் ஒன்றியச் செயலாளர் கண் கலங்கியபடி கூறினார். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


