Idhayam Matrimony

அல்பலா பல்கலை., குழும தலைவரை 13 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்கும் அமலாக்கத்துறை

புதன்கிழமை, 19 நவம்பர் 2025      இந்தியா
ED

Source: provided

புதுடெல்லி : அல்பலா பல்கலைக்கழக குழும தலைவரை 13 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்துள்ளது.

டெல்லியில் கடந்த 10-ந் தேதி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் சதித்திட்டம் தீட்டி இந்த தாக்குதலில் ஈடுபட்டதை தேசியபுலனாய்வு அமைப்பினர் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக கூட்டுச்சதியில் ஈடுபட்ட டாக்டர்கள் அகமது ராதர், முசமில் ஷகீல், சாகின் சயீத் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு தலைவனாக செயல்பட்ட டாக்டர் உமர் முகமது கார் வெடிப்பு சம்பவத்தில் பலியாகிவிட்டார்.

இந்த டாக்டர்கள் அனைவரும் டெல்லி அருகே பரிதாபாத் பகுதியில் உள்ள அல்பலா பல்கலைக்கழகத்தில் பணியாற்றியவர்கள் என்பது தெரியவந்தது. இந்த பல்கலைக்கழகத்தில் இருந்து தான் குண்டு வெடிப்புக்கான சதித்திட்டம் தீட்டப்பட்டதாக போலீசார் நம்புகிறார்கள். 

இதனைத் தொடர்ந்து அல்பலா பல்கலைக்கழகம், டெல்லி ஒக்லாவில் உள்ள அதன் தலைமை அலுவலகம் மற்றும் பல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய 25 இடங்களில் நேற்று முன்தினம் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. பல்கலைக்கழகத்தின் தலைவர் ஜாவேத் அகமது சித்திக்கின் வீட்டுக்கும் அமலாக்கத் துறை அதிகாரிகள் அதிகாலை 5 மணிக்கே சென்று அவரை விசாரித்தனர். அமலாக்கத்துறையின் இந்த சோதனையில் அங்கு பல்வேறு ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன. பல்கலைக்கழக அறக்கட்டளை நிர்வாகிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டது. 

இந்த விசாரணையில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது தெரிய வந்தது. இதையடுத்து பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அல்பலா பல்கலைக்கழக குழுமத்தின் தலைவர் ஜவாத் அகமது சித்திக்கியை அமலாக்கத்துறையினர் நேற்று முன்தினம் கைது செய்தனர். இதையடுத்து, டெல்லியில் கூடுதல் செஷன்ஸ் நீதிபதி ஷீடல் சவுத்ரி முன் ஜவாத் அகமது சித்திக் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சித்திகை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை அனுமதி கோரியது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி 13 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து