எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
நியூயார்க் : காசா அமைதி திட்டத்திற்கு ஐ.நா. அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் இடையே 2 ஆண்டுகளாக போர் தாக்குதல் நடந்தது. இதில் 65 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். போர் நிறுத்தம் மேற்கொள்ள அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் காசா அமைதி திட்டத்தை முன்வைத்தார். இதுதொடர்பக எகிப்தில் நடந்த மாநாட்டில் ட்ரம்ப் முன்னிலையில் 20-க்கும் மேற்பட்ட உலக தலைவர்கள் கையெழுத்திட்டனர்.
தொடர்ந்து போர் முடிவுக்கு வந்த நிலையில் பாலஸ்தீனத்தில் அமைதியை நிலைப்படுத்த அமெரிக்கா சார்பில் அமைதி வாரியம் அமைக்கப்பட்டது. மேலும் காசா அமைதி திட்டத்துக்கு ஒப்புதல் அளித்து அமைதி வாரியம் அமைத்து காசாவில் அமைதிப்படை வீரர்களை நிலைநிறுத்துவதற்காக வரைவு தீர்மானம் ஒன்றை ட்ரம்ப் முன்னெடுத்தார்.
இதுகுறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் அவருக்கு ஆதரவாக 15 நிரந்தர உறுப்பினர் நாடுகளில் 13 நாடுகள் வாக்களித்தனர். ரஷியாவும், சீனாவும் ஆதரவோ அல்லது எதிர்ப்போ தெரிவிக்கவில்லை. இதனை தொடர்ந்து காசா அமைதி திட்டத்தின் வரைவு தீர்மானத்திற்கு ஐ.நா. அமைப்பு ஒப்புதல் அளித்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


