முகப்பு

இந்தியா

modi 2017 09 02

அத்வானிக்கு 90-வது பிறந்தநாள் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

8.Nov 2017

புதுடெல்லி : பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே. அத்வானிக்கு நேற்று  (நவம்பர் 8- ம்தேதி) 90 வது பிறந்தநாளாகும். அவருக்கு பிரதமர் நரேந்திரமோடி ...

central gcenovernment(N)

35000 செயல்படாத நிறுவனங்களின் வங்கி கணக்கில் ரூ.17000 கோடி டெபாசிட் : மத்திய அரசு தகவல்

8.Nov 2017

புதுடெல்லி,  கடந்த ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி பணமதிப்பு நீக்கத்துக்கு பிறகான காலகட்டத்தில் செயல்படாத 35,000 நிறுவனங்களின் வங்கி ...

cbi court(N)

சட்டவிரோதமாக ரூபாய் நோட்டுகளை மாற்றியதாக 307 பேர் கைது: சி.பி.ஐ தகவல்

8.Nov 2017

புதுடெல்லி, சட்டவிரோதமாக ரூபாய் நோட்டுகளை மாற்றியது தொடர்பாக 77 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் 307 பேர் கைது ...

modi 2017 10 03

யுனெஸ்கோ பட்டியலில் சென்னை: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்

8.Nov 2017

சென்னை, யுனெஸ்கோவின் படைப்பாக்க நகரங்கள் நெட்வொர்க் பட்டியலில் சென்னை சேர்க்கப்பட்டுள்ளது, இந்திய கலாசாரத்தில் சென்னை ...

vijay mallya

அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக விஜய் மல்லையா: அமலாக்கத்துறை டெல்லி நீதிமன்றத்தில் மனு

8.Nov 2017

புதுடெல்லி, தொழிலதிபர் விஜய் மல்லையாவை அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக அறிவிக்கக் கோரி, அமலாக்கத்துறை டெல்லி நீதிமன்றத்தை ...

Delhi air-pollution 2017 11 08

டெல்லியில் காற்று மாசு எதிரொலி: பள்ளிகளுக்கு 12 ம் தேதி வரை விடுமுறை

8.Nov 2017

புதுடெல்லி, டெல்லியில் கடும் காற்று மாசு ஏற்பட்டுள்ளதால் பள்ளிகளுக்கு வரும் 12-ம் தேதி  வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.13 ம் ...

chidambaram 2017 07 01

நாட்டு மக்களின் இன்னல்களுக்குக் காரணமான பணமதிப்பு நீக்க நடவடிக்கை அறச்செயலா? ப.சிதம்பரம் கேள்வி

8.Nov 2017

புதுடெல்லி, பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் ஓராண்டு நிறைவை கறுப்புப் பண ஒழிப்பு தினமாக மத்தியில் ஆளும் பாஜக கொண்டாடும் நேரத்தில், ...

lalu prasad yadav 2017 9 7

பணமதிப்பு நீக்க நடவடிக்கை மூலம் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்குவது எளிதாகி விட்டது: லல்லு பிரசாத் யாதவ்

8.Nov 2017

பாட்னா, பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்குவது எளிதாகியுள்ளது, இதுதான் மத்திய அரசின் சாதனை என பிகார் ...

maitreyan 2017 11 8

டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.பி.க்களை தகுதிநீக்கம் செய்யுங்கள்: வெங்கையா நாயுடுவிடம் ஓ.பி.எஸ். அணியினர் மனு

8.Nov 2017

புதுடெல்லி :   டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.பி.க்களை தகுதிநீக்கம் செய்யுமாறு துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவிடம் ...

2G spectram case 2017 9 20

2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தீர்ப்பு தேதி மீண்டும் ஒத்திவைப்பு - டிசம்பர் 5-ம் தேதி வெளியாகிறது

7.Nov 2017

புதுடெல்லி : 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் தொடர்பான வழக்கின் தீர்ப்பு தேதியை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனி ...

himachal-pradesh 2017 11 7

சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது: இமாச்சலபிரதேசத்தில் நாளை வாக்குப்பதிவு

7.Nov 2017

சிம்லா : இமாச்சலபிரதேசத்தில் நேற்று மாலையுடன் சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் ஒய்ந்தது. இதனை அடுத்து 68 தொகுதிகளில் நாளை ...

2G spectram case 2017 9 20

தி.மு.க.வின் 2-ஜி ஊழல் வழக்கில் இன்று தீர்ப்பு தேதி அறிவிப்பு

6.Nov 2017

புதுடெல்லி : 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு தேதியை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி...

Pinarayi Vijayan 2017 9 9

கமலின் பேச்சுரிமைக்கு கொலை மிரட்டல் விடுப்பவர்களை கைது செய்யுங்கள் கேரள முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தல்

6.Nov 2017

திருவனந்தபுரம்: நடிகர் கமலுக்கு கொலை மிரட்டல் விடுத்த இந்து மகாசபாவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் ...

Yogi Adityanath 2017 10 9

இந்து தீவிரவாதம் என்போர் தேச விரோதிகள் - உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆவேசம்

6.Nov 2017

லக்னோ: இந்து தீவிரவாதம் என்று பேசி தங்கள் அறிவுஜீவித்தனத்தை பணம் பண்ண நினைப்பவர்கள் தேச விரோதிகள். அந்நிய நாட்டு கைக்கூலிகள், ...

mayawati 2017 1 7

மக்கள் நலனில் அக்கறை செலுத்தவில்லை: யோகி ஆதியநாத் மீது மாயாவதி குற்றச்சாட்டு

6.Nov 2017

லக்னோ, யோகி ஆதித்யநாத் அரசு மக்கள் நலனில் அக்கறை செலுத்தவில்லை என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ...

mamata-banerjee

ஜி.எஸ்.டி. என்பது 'கிரேட் செல்பிஷ் டாக்ஸ்' மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

6.Nov 2017

கொல்கத்தா, நரேந்திர மோடியின் ஜி.எஸ்.டி. திட்டத்தை கிரேட் செல்பிஷ் டாக்ஸ் (பெரிய சுயநல வரி) என மேற்கு வங்க மாநிலம் முதல்வர் மம்தா ...

IN06DARBARMOVE 2017 11 06

காஷ்மீரின் அரசு அலுவலகங்கள் ஸ்ரீநகரில் இருந்து ஜம்முவுக்கு மாற்றம்

6.Nov 2017

ஜம்மு: காஷ்மீரின் நீண்ட கால நடைமுறையான சட்டப்பேரவை மாற்றத்தின்படி, ஜம்மு காஷ்மீரின் அரசு அலுவலகங்கள் ஸ்ரீநகரில் இருந்து ...

dineshvar SHARMA 2017 11 06

சிறப்பு பிரதிநிதி தினேஷ்வர் சர்மா காஷ்மீரில் 5 நாள் சுற்றுப் பயணம்

6.Nov 2017

காஷ்மீர்: காஷ்மீர் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசின் சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள தினேஷ்வர் ...

Satya Nadella 2017 11 5

மைக்ரோசாஃப்ட் சி.இ.ஓ. சத்யா நாதெள்ளா அடுத்த வாரம் இந்தியாவில் சுற்றுப்பயணம்

5.Nov 2017

புதுடெல்லி : அமெரிக்காவின் ரெட்மாண்ட்டை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான ...

niti-aayog 2017 4 30

2022-ம் ஆண்டில் வறுமை இல்லாத நாடாக இந்தியா உருவாகும் - நிதி ஆயோக் அறிக்கை நம்பிக்கை

5.Nov 2017

புதுடெல்லி - அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா வறுமை, தீவிரவாதம், சாதிமத பேதம், ஊழலற்ற நாடாக உருவாகும் என்று நிதி ஆயோக் அமைப்பு ...

இதை ஷேர் செய்திடுங்கள்:

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

புதிய கேமரா

இங்கிலாந்தில் விஞ்ஞானி கேவ் தலிவால் தலைமையிலான குழு உடலை ஊடுருவிப் பார்த்து நோயின் தன்மையை சொல்லும் புதிய கேமராவை கண்டுபிடித்துள்ளது. ‘உடல் உள்ளுறுப்புகளின் தன்மை குறித்து ஆராய எண்டோஸ்கோப் போன்ற சாதனங்களை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், எண்டோஸ்கோப்பை உடலுக்குள் செலுத்திய பிறகு, அதன் இருப்பிடத்தை துல்லியமாக அறிந்து சரியான இடத்துக்கு நகர்த்த எக்ஸ்ரேவைத்தான் நாட வேண்டியுள்ளது. ஆனால், இந்த கேமரா, எண்டோஸ்கோப் இருப்பிடத்தை சரியாக காட்டி விடும். அதற்கான நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சிலிக்கான் சிப், கேமராவில் பொருத்தப்பட்டுள்ளது. எனவே, இனி எக்ஸ்ரே மற்றும் ஸ்கேனுக்கு அவசியம் இல்லை.

எதிர்கால தொழில்நுட்பம்

நெடுஞ்சாலைப் பயணத்துக்கு மட்டுமே பொருந்தும் ஒரே ஓட்டுநரால் இயக்கப்படும் பல வாகனத் தொடர்  அதாவது 'டிராக் ப்லாடூன்' தொழில்நுட்பத்தில், வாகனங்கள் அனைத்தும் ஒரே சீரான வேகத்தில் செல்ல முடியும். வாகனங்களுக்கு இடையேயான இடைவெளி ஒரே அளவாக இருப்பதால், போக்குவரத்து நெரிசல் குறைவதுடன், 20 சதவிகிதம் வரை எரிபொருள் சேமிக்கப்படுமாம். வைஃபை எனப்படும் வயர்லெஸ் தொழில்நுட்பத்தில் மற்ற வாகனங்கள் இணைக்கப்பட்டு இது செயல்படுத்தப்படுகிறது. வைஃபை, ஸ்டீரிங் கட்டுப்பாடு உள்ளிட்டவற்றுக்குத் தேவையான சில கருவிகளைப் பொருத்திவிட்டால், எந்தவொரு காரும், ப்லாடூன் வாகனத் தொடரில் இணைய முடியும். ஒரே நேரத்தில் பல வாகனத் தொடர்கள் ஒரே சாலையில் செல்வதும், ஒரு வாகனத் தொடரில் செல்லும் கார், மற்றொரு வாகனத் தொடருக்கு மாறுவதும் இந்த தொழில்நுட்பம் மூலம் சாத்தியம்.

கழுத்து சுருக்கம் போக..

சரியான உணவு பழக்க வழக்கங்களை கடைப்பிடிக்காமல் இருப்பது, ஹார்மோன் பிரச்சினைகளால் கழுத்து சுருக்கங்கள் ஏற்படுகிறது. இதை போக்க,  அன்னாசி பழ சாறை கழுத்து பகுதியில் தடவி மசாஜ் செய்து பின் கழுவ வேண்டும். மேலும், முட்டைக்கோஸ் சாறு,  தக்காளி பழ சாறு, ஆலிவ் எண்ணெயை கொண்டும் கழுத்து சுருக்கத்தை போக்கலாம்.

இதற்குமா ரோபோட்?

ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் நடந்த கண்காட்சியில் பெப்பர் எனும் ரோபோட் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த ரோபோட் புத்த மதம் பாரம்பரிய முறைப்படி இறுதிச் சடங்கு பணிகளை செய்து காண்பித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இதில் உள்ள மென்பொருள் மூலம் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் இவற்றை பயன்படுத்தி இறுதி சடங்கை மேற்கொள்ளலாம்.

புதிய சிகிச்சை

அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் ஒன்று, வயதானவர்களுக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்துவது குறித்த சோதனை முயற்சியை மேற்கொண்டது. வயதானவர்கள் உடலில் இளைஞர்களின் ரத்தத்தை ஏற்றுவதுதான் அந்த முயற்சி. வயதானவர்கள், உடலில் இளைஞர்களிடமிருந்து எடுக்கப்பட்ட 2.5 லிட்டர் பிளாஸ்மா செலுத்தப்பட்டு ஆய்வு செய்யப்பட்டதில் முடிவுகள் நல்லவிதமாக வந்துள்ளதாம்.

புதிய தகவல்

செவ்வாய் கிரகம் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டு வரும் நாசாவின் மார்ஸ் ரெகனைசன்ஸ் ஆர்பிட்டர் பிடித்துள்ள புகைப்படத்தில் பனிக் குன்றுகள் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த புகைப்படம் உயர் ரெசொல்யூஷன் கொண்ட இமேஜிங் அறிவியல் பரிசோதனை திறன் கொண்ட கேமரா (HiRISE ) மூலம் எடுக்கப்பட்டது. இந்த புகைப்படத்தின் மூலம் செவ்வாய் கிரகத்தில் பனி மலைகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தரையில் தூக்கம்

உடலில் தோன்றும் வலிகளுக்கு காரணம் இடுப்பிலும், தோளிலும் ஏற்படும் சீரற்ற தன்மையால் தான். மேலும், தோள்கள், மேல் முதுகு, கீழ் முதுகு, கைகள், கழுத்து எலும்பு, கழுத்தின் அடி பாகம், தலை போன்ற இடங்களில் வலி ஏற்படலாம். முதுகை தரையில் வைத்து படுப்பதால் இடுப்புகளும், தோள்களும் வலி இல்லாமல் இருக்கும். இதனால் மற்ற பகுதிகளில் ஏற்படும் வலிகளும் முற்றிலும் நீங்கும்.

உதடு வறட்சி

உதடுகளில் வறட்சி ஏற்படுவதற்கு, அல்ல‍து காய்ந்து போவதற்கு உடலின் வெப்ப‍நிலை அதிகரிப்பே காரணம். உஷ்ணத்தைக் குறைக்கும் மோரை அடிக்கடி பருகினால் நல்லது. மேலும் வெண்ணெய் சிறிது எடுத்து அடிக்கடி சாப்பிட்டு வர வேண்டும். மேலும் ஒவ்வொரு நாள் இரவில் வெண்ணெயைக் கொஞ்சம் உதட்டில் தடவிக்கொண்டு படுக்கைக்கு செல்ல‍ வேண்டும்.

ஆக்ஸிஜனின் பிறப்பிடம்

பூகோளத்தின் நுரையீரல் என்று அழைக்கப்படும் அமேசான் காடுகளின் மொத்த பரப்பளவு 55 லட்சம் ச.கி.மீ. பிரேசில் உள்ளிட்ட 9 நாடுகள் வரை நீண்டிருக்கும் இதை ஒரு நாடாக கருதினால், பரப்பளவில் இது 9-வது இடத்தைப் பிடிக்கும். இதில் 6,400 கி.மீ. தூரமுள்ள நதி ஓடுகிறது. நீளமான நதிகளின் பட்டியலில் அமேசான் நதி 2-ம் இடத்தில் உள்ளது. 40 ஆயிரம் தாவர இனங்கள், 3 ஆயிரம் மீன் இனங்கள், 400க்கும் மேற்பட்ட பாலூட்டிகள் இங்கு வசிக்கின்றன. அமேசான் மழைக்காடுகளால் தான் உலகிற்கு 20 சதவிகிதத்திற்கும் அதிகமான ஆக்ஸிஜன் கிடைக்கிறது. அதேபோல் ஆயிரத்திற்கும் மேற்போட்ட பறவை இனங்களும், 25 லட்சம் வகை பூச்சிகளுக்கும் அமேசான் காடுகள்தான் வாழ்விடமாக இருக்கின்றன. உலகில் 3 டி.செ வெப்பநிலை அதிகரிப்பால் இந்த காடு தற்போது அழிவை எதிர்நோக்கியுள்ளது.

பனிஉருகும் அபாயம்

பூமிப்பந்தின் தென்கோடியில் அமைந்துள்ள அண்டார்டிகா முழுவதும் பனிப்பாறைகளைக் கொண்ட கடல் ஆகும். கிரீன்ஹவுஸ் வாயுக்களாலும், வெப்பமயமாகும் கடலாலும் காலநிலை மாற்றம் ஏற்பட்டு துருவப்பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உருகி வரும் வேளையில், மேற்கு அண்டார்டிகாவில் 91 புதிய எரிமலைகள் இருப்பதை சமீபத்தில் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இவற்றின் மூலம் எப்போது வேண்டுமானாலும் பனிப்பாறைகளுக்கு பாதிப்பு வரலாம். இதனால் பனி உருகி கடல் மட்டம் உயரும் அபாயமும் உள்ளது. இது உலகிற்கு மிக முக்கியமான எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது. மேலும், இந்த நூற்றாண்டு பூமியின் தென் துருவத்திற்கு அவ்வளவு சிறப்பானதாக இருக்காது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். வருவதாக ஆய்வாளர்கள் தொடர்ச்சியாகக் கூறி வருகின்றனர்.

புத்துணர்ச்சிக்கு காபி

மூளையில் அடினோசின் என்னும் வேதிப்பொருள் உள்ளது. இது மனதை அமைதியான நிலையில் வைத்திருக்க உதவுகிறது. காபி குடிக்கும்போது அதில் உள்ள கெஃபைன், அடினோசின் ஆதிக்கத்தைக் குறைப்பதால் புத்துணர்ச்சி கிடைக்கிறது. ஒரு நாளைக்கு 250 மி.கிராம் கெஃபைன் உட்கொள்வது நல்லது. அதாவது நாள் ஒன்றுக்கு 2 தடவை மட்டும் காபி அருந்தினால் நல்லதாம்.

பாதாமின் அற்புதம்

பாதாம் உடல் வலிமையையும், எலும்பின் வலிமையையும் ஊக்கவிக்கிறது.பாதாம் உட்கொள்வதால், இதய கோளாறுகள், கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம், உடல் பருமன், பற்கள் வலி, பித்தக்கற்கள், இரத்த சோகை, மூளை சோர்வு, மலச்சிக்கல் போன்ற உடல்நல பிரச்சனைகளுக்கு சீரான தீர்வுக் காண முடியும்.  பாதாமை தினமும் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் அவர்களது எலும்பு நன்கு உறுதியாகும்.