முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

17 வயது இளம் ஆஸி. வீரர் மரணம்

வியாழக்கிழமை, 30 அக்டோபர் 2025      விளையாட்டு
Ben-Austin-2025-10-30

ஆஸ்திரேலியாவை சேர்ந்த 17 வயது இளம் வீரர் பென் ஆஸ்டின் பேட்டிங் பயிற்சியின்போது கழுத்தில் பந்துதாக்கி மரணம் அடைந்துள்ளார். இந்த செய்தி வெளியாகி கிரிக்கெட் உலகில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மெல்போர்னில் கிளப் அணிக்காக விளையாடும் ஆஸ்டின் கடந்த செவ்வாய்க்கிழமை பெர்ன்ட்ரீ கல்லியில் வலை பயிற்சி எடுத்துள்ளார். அப்போது சக பவுலர்கள் வீசிய பவுன்சர் பந்துகளை ஹெல்மெட் அணிந்து கொண்டு பேட்டிங் செய்து பயிற்சி எடுத்துள்ளார். ஆனால் கழுத்து பகுதியை பாதுகாக்கும் அம்சம் அதில் இல்லை.

இந்நிலையில் துரதிர்ஷ்டவசமாக ஒரு பந்து அவருடைய கழுத்துப் பகுதியில் பலமாக பட்டுள்ளது. அதனால் சுருண்டு விழுந்த அவரை உடனடியாக அருகில் இருக்கும் மோனஸ் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள். அங்கே அவருக்கு 2 நாட்கள் தீவிர சிகிச்சை கொடுத்தப்பட்டது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இன்று மரணமடைந்தார். இதனை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது.

ஜூலனின் சாதனை முறியடிப்பு

13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில், அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்த முதலாவது அரையிறுதியில் இங்கிலாந்து - தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் இங்கிலாந்து அணி 42.3 ஓவர்களில் 194 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் தென் ஆப்பிரிக்கா 125 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, உலகக் கோப்பையில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்து வரலாறு படைத்தது. இங்கிலாந்து தரப்பில் கேப்டன் நாட் சிவெர் (64 ரன்), அலிஸ் கேப்சி (50 ரன்) ஆகியோர் அரைசதம் அடித்தனர். 

தென்ஆப்பிரிக்க தரப்பில் மரிஜானே காப் 7 ஓவர்களில் 3 மெய்டனுடன் 20 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார். இந்த ஆட்டத்தில் கைப்பற்றிய 5 விக்கெட்டுக்ளையும் சேர்த்து மரிஜானே காப் இதுவரை மகளிர் உலகக் கோப்பையில் கைப்பற்றிய விக்கெட்டுகளின் எண்ணிக்கை 44-ஆக உயர்ந்தது. இதன் மூலம் மகளிர் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்திய வீராங்கனை என்ற சாதனையை இந்தியாவின் ஜூலன் கோஸ்வாமியிடம் (43 விக்கெட்) இருந்து தட்டிப்பறித்தார்.

5 சிறந்த இந்திய வீரர்கள்: மெக்ராத்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் சிறப்பான செயல்பாட்டினை வெளிப்படுத்திய ஆல் டைம் சிறந்த 5 இந்திய பேட்ஸ்மேன்களை ஆஸ்திரேலிய முன்னாள் வீரரான கிளென் மெக்ராத் தேர்வு செய்துள்ளார். முதலாவதாக விராட் கோலியை தேர்வு செய்துள்ள அவர், 2-வது இடத்தில் ரோகித் சர்மாவை தேர்வு செய்து ஆச்சரியமளித்துள்ளார். 

3-வதாக சச்சின் தெண்டுல்கரை தேர்வு செய்துள்ளார். ஆனால் அவர் இந்திய ஒருநாள் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கிய முன்னணி நட்சத்திர பேட்ஸ்மேன்களான சேவாக், டிராவிட் போன்ற வீரர்களை தேர்வு செய்யாமல் ஆச்சரியமளித்துள்ளார். மெக்ராத் தேர்வு செய்த ஆல் டைம் சிறந்த 5 இந்திய பேட்ஸ்மேன்கள்: 1. விராட் கோலி, 2. ரோகித் சர்மா, 3. சச்சின் தெண்டுல்கர், 4. மகேந்திரசிங் தோனி, 5. யுவராஜ் சிங் .

மீண்டும் களத்தில் ரிஷப் பண்ட்

இந்தியா ஏ- தென் ஆப்பிரிக்கா ஏ அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி (4 நாள் ஆட்டம்) பெங்களூருவில் தொடங்கியது. காயத்தில் இருந்து மீண்டுள்ள இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் நீண்ட நாட்களுக்கு பிறகு களத்திற்கு திரும்பியுள்ளார். அதன்படி ரிஷப் பண்ட் இந்திய ஏ அணியை வழிநடத்துகிறார். இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய ஏ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி தென் ஆப்பிரிக்கா ஏ அணி முதலில் பேட்டிங் செய்கிறது. 

 

ஷ்ரேயாஸ் உருக்கமான பதிவு

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த சனிக்கிழமை சிட்னியில் நடந்த 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தின் போது இந்திய அணியின் துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயருக்கு காயம் ஏற்பட்டது. அதில் அவரது இடது கீழ் விலாஎலும்பு பகுதியில் காயமடைந்திருப்பதாகவும், அதற்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்பிறகு சிட்னியில் உள்ள ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ.) ஷ்ரேயாஸ் ஐயர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.

 

அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் இன்னும் சில நாட்களில் மருத்துவமனையில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தான் குணமடைந்து வருவதாக ஷ்ரேயாஸ் ஐயர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "நான் தற்போது குணமடைந்து வருகிறேன். எனக்குக் கிடைத்த அனைத்து அன்பான வாழ்த்துக்களையும் ஆதரவுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இது உண்மையிலேயே நிறைய அர்த்தம் தருகிறது. என்னை உங்கள் நினைவுகளில் வைத்திருந்ததற்கு நன்றி" என்று பதிவிட்டுளளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து