முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக வீராங்கனைக்கு ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார்: துணை முதல்வர் உதயநிதி

வியாழக்கிழமை, 30 அக்டோபர் 2025      விளையாட்டு
Udhayanidhi-2025-10-30

சென்னை, தடகளத்தில் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைக்கு ரூ.25 லட்சம் ஊக்கத்தொகையை துணை முதல்வர் உதயநிதி வழங்கி பாராட்டினார்.

3-வது ஆசிய இளையோர் விளையாட்டு போட்டி பக்ரைனில் நடந்தது. இதில் தடகளத்தில் நெல்லையைச் சேர்ந்த எட்வினா ஜேசன் 400 மீட்டர் மற்றும் 1,000 மீட்டர் மெட்லே தொடர் ஓட்டத்தில் 2 வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். சென்னை திரும்பிய அவருக்கு ரூ.25 லட்சத்தை ஊக்கத்தொகையாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கி பாராட்டினார்.

இதே போல் சமீபத்தில் ராஞ்சியில் நடந்த 4-வது தெற்காசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப்பில் தமிழகத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் 4 தங்கம் உள்பட 10 பதக்கங்களை வென்றனர் இவர்களில் மனவ், நந்தினி, ஒலிம்பா ஸ்டெபி, சரண், தினேஷ், ஆதர்ஷ் ராம், பவானி ஆகியோருக்கு தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியில் இருந்து மொத்தம் ரூ.15.50 லட்சத்தை ஊக்கத்தொகையாக உதயநிதி ஸ்டாலின் அளித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து