எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பை, விஜயுடன் கூட்டணி பேச்சுவார்த்தை என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, கூட்டணி கட்சியுடன் ஆலோசனை செய்தே இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார். மேலும் கூட்டணிக்காக யார் வேண்டுமானாலும் எந்த கட்சியுடனும் பேசலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த ஆண்டு நடைபெற தமிழக சட்டசபை தேர்தலை நோக்கி அரசியல் கட்சிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. அந்த வகையில், கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு உள்ளிட்டவை ரகசியமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே, புதிதாக கட்சி தொடங்கி முதல் தேர்தலை எதிர்நோக்கி உள்ள தமிழக வெற்றிக்கழகம் கூட்டணியில் இணையுமா? இல்லையா? என்பது போகப்போகத்தான் தெரியும்.
இதனிடையே, தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜயுடன் கூட்டணி தொடர்பாக அ.தி.மு.க., பா.ஜ.க. பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனை த.வெ.க. தரப்பில் மறுத்தாலும், அ.தி.மு.க.,பா.ஜ.க. தரப்பில் எந்த கட்சியும் இணையலாம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அவரிடம் த.வெ.க.வுடன் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெறுகிறதா? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அமித்ஷா, தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியை மேலும் விரிவாக்க விரும்புகிறோம். கூட்டணி கட்சியுடன் ஆலோசனை செய்தே இறுதி முடிவு எடுக்கப்படும். கூட்டணிக்காக யார் வேண்டுமானாலும் எந்த கட்சியுடனும் பேசலாம் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


