எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பை, டெஸ்ட் வரலாற்றில் முதல் முறையாக உணவு இடைவேளைக்கு முன் தேநீர் இடைவேளை நடைமுறைக்கு வருகிறது. இந்த நடைமுறை எதிர்வரும் இந்தியா - தெ.ஆப்பிரிக்க போட்டியில் அறிமுகமாகிறது.
சுற்றுப்பயணம்...
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்த தொடர் முடிவடைந்தவுடன் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுடன் விளையாட உள்ளது. சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி, 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. முதலில் டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்திலும் 2-வது டெஸ்ட் போட்டி கவுத்தாத்தியிலும் நடைபெற உள்ளது.
சில மாற்றங்கள்...
இந்நிலையில் கவுத்தாத்தி மைதானத்தில் நடைபெறும் 2-வது டெஸ்ட் போட்டியின் செசன்களில் (இடைவேளை) சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி மதிய உணவு இடைவேளைக்கு முன் தேநீர் இடைவேளை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அசாம் மாநிலத்தில் உள்ள கவுத்தாத்தியில் சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மதிய உணவிற்கு...
அதன்படி முதல் செசன் இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு தொடங்கி காலை 11:00 மணிக்கு முடிவடையும். அதைத் தொடர்ந்து தேநீர் இடைவேளை எடுக்கப்படும். 2-வது செசன் காலை 11:20 மணி முதல் பிற்பகல் 1:20 மணி வரை நடைபெறும். அதன் பிறகு வீரர்கள் மதிய உணவிற்கு இடைவேளை எடுப்பார்கள். மதிய உணவுக்குப் பிறகு முதல் நாளின் மூன்றாவது மற்றும் இறுதி செசன் ஆகும். அது இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட்டிக்கப்படலாம்....
வழக்கமாக, இந்தியாவில் டெஸ்ட் போட்டிகள் காலை 9:30 மணிக்குத் தொடங்கும், மதிய உணவு காலை 11:30 மணிக்கு நடைபெறும். இரண்டாவது அமர்வு காலை 12:10 மணி முதல் பிற்பகல் 2:10 மணி வரை நடைபெறும், அதைத் தொடர்ந்து தேநீர் இடைவேளை இருக்கும். இறுதி அமர்வு பிற்பகல் 2:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை நடைபெறும், மேலும் பகலில் 90 ஓவர்கள் விளையாட அனுமதிக்க அரை மணி நேரம் நீட்டிக்கப்படலாம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


