Idhayam Matrimony

33 ஆண்டுகளுக்கு பிறகு அணு ஆயுத சோதனை நடத்துகிறது அமெரிக்கா..!

வியாழக்கிழமை, 30 அக்டோபர் 2025      உலகம்
Trump 2023 03 05

நியூயார்க், அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து பிற நாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், சீன பொருட்களுக்கு எதிராக கூடுதல் வரி விதித்தார். இதனால் அமெரிக்கா- சீனா இடையே சலசலப்பு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில், தென்கொரியாவின் புசான் நகரில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்- சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தைக்கு முன்னதாக அணு ஆயுத சோதனையை மீண்டும் தொடங்குமாறு அமெரிக்க ராணுவத்திற்கு அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டார். 1992 ஆம் ஆண்டுக்கு பிறகு அதாவது 33 ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக அமெரிக்கா அணு ஆயுத சோதனையை மேற்கொள்ளவுள்ளது.

இதனிடையே ட்ரம்ப் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "அமெரிக்கா மற்ற எந்த நாட்டையும் விட அதிக அளவில் அணு ஆயுதங்களை வைத்துள்ளது. என்னுடைய முதல் ஆட்சிக் காலத்தில் ஆயுதங்களை புதுப்பித்ததால் இது சாத்தியமானது. 

அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை பொறுத்தவரையில் ரஷ்யா இரண்டாமிடத்திலும், சீனா மூன்றாம் இடத்திலும் இருக்கிறது. ஆனால் இன்னொரு 5 ஆண்டுகளில் சீனாவிடமும் சரிசமமான ஆயுதங்கள் இருக்கும். மற்ற நாடுகளின் பரிசோதனை திட்டங்களை கருத்தில் கொண்டு, நம்முடைய அணு ஆயுதங்களை சம அளவில் பரிசோதிக்க அனுமதி வழங்குகிறேன். இது உடனடியாக தொடங்கும் என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து