இதுவரை நான் வாழ்ந்த வாழ்க்கை காற்றில் போனதே

சனிக்கிழமை, 19 பெப்ரவரி 2011      சினிமா

 

சென்னை, பிப்,20

குளிர் படத்தில் நாயகனாக அறிமுகமான சஞ்சீவ் - அத்வைதா பங்கு பெறும் இப்பாடல்.....

காரைக்குடி, பள்ளத்தர், கண்டனூர், புதுவயல் போன்ற பதினைந்து ஊர்களில் கடைத் தெரு, கம்மாக்கரை, வயல்வெளி மற்றும் அழகப்பா பல்கலைக்கழகத்திலும் பல்வேறு லொக்கேஷன்களில் படமானது. சஞ்சீவ் அத்வைதாவை ஏற்கனவே காதலிக்கிறார். அத்வைதாவிற்கும் சஞ்சீவ் மீது காதல் பிறக்க, அவள் கண்ணோட்டத்தில் பாடலின் சூழல் அமைந்திருக்கிறது.

பழனிக்கு பாத யாத்திரை போகும் குழுவினரில் இருவருக்கும் இடையில் ஏற்படும் காதல், அவர்களின் சகாக்களுக்கு இடையேயான அன்பு, பிரிவு, பிரச்சினைகள் போன்றவற்றை விவரிக்கும் படம் சகாக்கள். இதில் குளிர் சஞ்சீவ், அத்வைதா, சங்கர், சிவசங்கர், ஜே.பி., பானுமதி மற்றும் பலர் நடிக்கிறார்கள். இசை தயாரத்னம், ஒளிப்பதிவு ஸ்ரீ.எம்.அழகப்பன், படத்தொகுப்பு ஏ.எல்.ரமேஷ், கலை மாயக்கண்ணன், வசனம் பாஸ்கர் சக்தி, சண்டைப் பயிற்சி ஆக்ஷன் பிரகாஷ், தயாரிப்பு மேற்பார்வை கே.பி.வேலு, கதை, திரைக்கதை, இயக்கம் எல்.முத்து குமாரசாமி, இவர் எம்டன் மகன் திருமுருகனிடம் அஸோஸியேட்டாக பணியாற்றியவர். வி.வி.வி. கிரியேஷன்ஸ் தயாரிக்கும் படம் இது.

இதை ஷேர் செய்திடுங்கள்: