திருச்செந்தூர் கோவில் மாசித்தேரோட்டம்

சனிக்கிழமை, 19 பெப்ரவரி 2011      தமிழகம்

 

திருச்செந்தூர், பிப்.19-

திருச்செந்தூர் கோவிலில் மாசித்தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது.


முருகபெருமானின் 2 வது படைவீடு என்ற சிறப்பு பெற்றது  திருச்செந்தூர் திருத்தலம். இங்கு மாசித்திருவிழா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த திருவிழா பத்து நாட்களுக்கு முன் கொடியேற்றத்துடன் துவங்கியது. ஒவ்வொரு நாளும் சிறப்பு வழிபாடுகளுடன் சுவாமி ஊர்வலமும் நடைபெற்றது.இந்த திருவிழாவின் உச்ச கட்ட நிகழ்வான தேரோட்டம் நேற்று நடந்தது. இதை முன்னிட்டு அதிகாலை 1மணிக்கே நடை திறக்கப்பட்டது. முருகப்பெருமானுக்கு பூஜைகள் செய்த பிறகு காலை 6.45 மணிக்கு நேற்று தேரை வடம்பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்செந்தூர் கோவில் அதிகாரி பாஸ்கரன், ஜெயதுரை எம்.பி உட்பட ஏராளமான முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: