முதுகுளத்தூர் அருகே போலீசார் துப்பாக்கி சூடு - பதட்டம்

திங்கட்கிழமை, 21 பெப்ரவரி 2011      தமிழகம்

 

கடலாடி பிப் 21  - முதுகுளத்தூர் அருகே ஆட்டோ டிரைவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து முதுகுளத்தூரில் பஸ் மறியல் நடைபெற்றது. கூட்டத்தை கலைக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். 

முதுகுளத்தூர் அருகே உள்ள கீழசாக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் கிழவன் மகன் துரை பாண்டியன்(35) இவர் வெளிநாட்டில் வேலை பார்த்தவர் தற்போது விடுமுறைகாக ஊருக்கு வந்தவர் முதுகுளத்தூரில் குடும்பத்துடன் தங்கினார். இந்நிலையில் கடந்த 2 தினங்களாக துறை பாண்டியன் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். சம்பவத்தன்று வழக்கம் போல் ஆட்டோவில் ஆட்களை ஏற்றிக் கொண்டு சென்றுள்ளார். இந்நிலையில் இன்று காலையில் கீழ மானாங்கரை மற்றும் காத்தாக்குளம் கிராமத்திற்கு செல்லும் விளக்கு ரோட்டில் மர்மமான முறையில் துறை பாண்டியன் வெட்டி படு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இவர் மீது தலை,கை, களுத்து ஆகிய பகுதிகளில் வெட்டப்பட்டிருந்தது. இது தொடர்பாக முதுகுளத்தூர் காவல் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் பேரில் மாவட்ட எஸ்.பி அனில் கிரன் டி.எஸ்.பி. நாக ராஜன், சப். இன்ஸ்பெக்டர் கீதா, மற்றும் போலீசார் துறை பாண்டியின் உடலை பிரேத பரிசோதனைக்காக த.மு.மு. க ஆம்புலேன்ஸில் கொண்டு வந்தனர் அப்போது முதுகுளத்தூர் பஸ் நிலையத்தில் இறந்த துரை பாண்டியின் உரவினர்கள் கிராம மக்கள் ஆட்டோ டிரைவர்கள் ஆகியோர் சேர்ந்து திடீரென பஸ் மறியலில் ஈடுபட்டனர் .மறியலில் இறந்தவரின் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டன. இது சம்பந்தமாக ஆர்.டி.ஒ. சண்முகையா மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை ஏற்படுத்தியதில் சமரசம் ஏற்படாததால் பொது மக்கள் தொடர் பஸ் மறியலில் ஈடுபட்டனர். இதனை அடுத்து மாவட்ட எஸ்.பி. அனில் குமார் கிரி தலைமையில் மாலை 3.00 மணி அளவில் போலீசார் திடீரென 

தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். அப்போது கூட்டத்தை கலைப்பதற்காக 7 முறை வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர் இதில் வன்முறையாளர்களும் போலீசாரும் மாற்றி மாற்றி கல்லைக் கொண்டு எரிந்தனர். இதில் ஒரு ஆட்டோ த.மு.மு.க ஆம்புலேன்ஸ் ஆகியவை நொருக்கப்பட்டன இச்சம்பவம் தொடர்பாக இரண்டு பெண் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர் . முதுகுளத்தூர் பகுதியில் நடைபெற்றுள்ள  இந்த படுகொலை சம்பவம் இப்பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. காலை 11.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை முதுகுளத்தூரில் இருந்து எந்த ஓரு கிராமத்திற்கும் பேருந்தும் செல்லவில்லை. அதே போல் கடைகளும் திறக்கப்படாமல் இருந்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்: