முக்கிய செய்திகள்

ஜெயலலிதாவை மீண்டும் சந்தித்தார் எஸ்.ஏ. சந்திரசேகர்

திங்கட்கிழமை, 21 பெப்ரவரி 2011      சினிமா

 

சென்னை,பிப்.21 - அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை நடிகர் விஜயின் தந்தையும், திரைப்பட இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர் சென்னையில் மீண்டும் சந்தித்துப் பேசினார். கடந்த சில மாதங்களில் மூன்றாவது முறையாக ஜெயலலிதாவை அவர் சந்தித்து பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சென்னை போயஸ்கார்டனில் நடைபெற்ற இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நீடித்தது. மீனவர்களுக்கு எதிரான இலங்கை அரசின் போக்கை கண்டித்து நடிகர் விஜயின் மக்கள் இயக்கம் நாளை நடத்தவுள்ள பொதுக்கூட்டத்துக்கு முன்பாக நடந்துள்ள இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இது குறித்து எஸ்.ஏ. சந்திரசேகரிடம் கேட்ட போது, 

இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது. இது குறித்து வேறெதும் சொல்வதற்கில்லை. நாகை பொதுக்கூட்டத்துக்கு தயாராகி வருகிறோம். நாளா நாகை செல்கிறேன். 22 ம் தேதி காலை விஜய் நாகைக்கு வருகிறார். கூட்டத்துக்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: