முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அன்னதான திட்டம் கூடுதலாக 50 கோயில்களுக்கு விரிவாக்கம்

செவ்வாய்க்கிழமை, 27 மார்ச் 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.27 -தற்போது 468 கோயில்களில் வழங்கப்பட்டு வரும் அன்னதானத்திட்டம் மேலும் 50 திருக்கோயில்களுக்கு விரிவுப்படுத்தப்படும் என்றும், புதிதாக 1006 கோயில்களுக்கு குடமுழுக்கு செய்யப்படும் என்றும், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் இந்து சமய அறநிலையத்துறை குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

கோயில்கள், வழிபாட்டுத் தலங்களை பாதுகாத்து பராமரிக்க இந்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.  20112012 ஆம் ஆண்டு 1,006 திருக்கோயில்கள் புதுப்பிக்கப்பட்டு குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளன.  இதே போன்று, வரும் ஆண்டிலும் 1,006 கோயில்கள் தெரிவுசெய்து குடமுழுக்கு செய்யப்படும்.  

தவறாக வகைமாற்றம் செய்யப்பட்ட மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் சொத்துகளை மீட்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.  கோயில் சொத்துகளை விரைந்து மீட்பதற்காகவும், கோயில் நிலங்கள் குறித்த வழக்குகளை தீர்ப்பதற்காகவும் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வருவாய் அலகுகளும், வருவாய் nullதிமன்றங்களும் மேலும் வலுப்படுத்தப்படும்.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிந்தையில் உதித்த உன்னதத் திட்டமாகிய அன்னதானத் திட்டம் தற்போது 468 திருக்கோயில்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  இத்திட்டம் 20122013 ஆம் ஆண்டில் மேலும் 50 திருக்கோயில்களுக்கு விரிவுபடுத்தப்படும்.  இத்திட்டம் செயல்படுத்தப்படும் அனைத்துக் கோயில்களிலும், பக்தர்களுக்கு சுகாதாரமான உணவு அளிக்கும் வகையில், சமையற்கூடங்கள் நவீனப்படுத்தப்படும்.  ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலிலும், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலிலும்,   காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை நாள் முழுவதும் தொடர்ந்து அன்னதானம் அளித்திட  முதலமைச்சர் உத்திரவிட்டுள்ளார்.

ஸ்ரீரங்கத்தில், 25 கோடி ரூபாய் செலவில் பயணியர் விடுதி அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.  பழநி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்காக, குறிப்பாக, முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள், பெண்கள், குழந்தைகள் ஆகியோருக்கு வசதியான நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கம்பிவட சீருந்து வசதி ஏற்படுத்தப்படும்.  இன்னொரு சிறப்பு முயற்சியாக, நமது பண்டைய இலக்கியங்களில் உள்ள நற்பண்பு, nullதிநெறிக் கருத்துகளை கதைகள் வாயிலாக குழந்தைகளின் மனத்தில் ஆழப்பதித்திட, சனிக்கிழமை தோறும் ஆன்மீக, nullதிநெறி வகுப்புகளை முக்கிய திருக்கோயில்களில் நடத்திட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.  இந்த வகுப்புகளின்போது சிற்றுண்டி அளிக்கப்பட்டு, சிறந்த மாணவ மாணவியருக்கு பரிசுகளும் அளிக்கப்படும்.

இவ்வாறு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago