முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

`சூரியநகரம்'' பட விமர்சனம்

ஞாயிற்றுக்கிழமை, 8 ஏப்ரல் 2012      சினிமா
Image Unavailable

ஒரு ஊர்க்காரர்கள் ஜாதி வெறியால் மோகிக்கொள்கிறார்கள். இதனால் பகை தொடர்ந்துக் கொண்டே போகிறது. ஊர் பெரிய மனிதர் ஆர்.வி.உதயகுமார் இவரின் மகள் மீரா நந்தன் (நாயகி) இவர் மெக்கானிக் ஷாப்பில் வேலை செய்யும் ராகுல் ரவிந்தரை (நாயகன்) காதலிக்கிறார். ராகுல் வேறு ஙீஜாதிக்காரர் இவர்கள் காதலுக்கு மீரா நந்தன் தம்பி உதயா சிறு வயது முதல் உதவியாக இருக்கிறார். ஒரு கட்டத்தில் காதல் விஷயம் மீராவின் அப்பா உதயகுமாருக்கு தெரியவருகிறது, இதனால் அவர் கொதித்து எழுகிறார். மகள் மீராவை கண்டிப்பதுடன், மீராவின் காதலன் ராகுலை அடியாட்கள் வைத்து அடித்து துவசம் செய்கிறார். அப்போது எதிர்பாராதவிதமாக மீராவின் மாமாவை கொலை செய்து விடுகிறார் ராகுல். இதனால் தண்டனை பெற்று ஜெயிலில் அடைக்கப்படுகிறார். இந்நிலையில் மீராவுக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. திருமணத்தில் மீராவுக்கு சம்மதம் இல்லை. அப்போது, எதிரிகளால் மீராவின் அப்பா உதயக்குமார் வெட்டி கொலை செய்யப்படுகிறார். குடும்ப பொறுப்பை சுமக்கும் உதயா சிறையில் இருக்கும் நண்பர் ராகுலுக்கு மீராவை திருமணம் செய்து வைத்து, காதலர்களை ஒன்று சேர்க்க முடிவு எடுக்கிறார். இதை ஊர்க்காரர்கள் எதிர்க்கிறார்கள். இந்த  எதிர்ப்பை மீறி ராகுல்-மீரா திருமணம் நடந்ததா, இல்லையா என்பது க்ளைமாக்ஸ்.ஜாதிவெறி பிடித்த வில்லன் பாத்திரத்துக்கு அற்புதமாக பொருந்தி  இருக்கிறார் ஆர்.வி.உதயகுமார். அதோடு நடிப்பில் மிரட்டியிருக்கிறார். வேறு ஜாதியை சேர்ந்தவர் தனக்கு மருமகனாக வருவதா என்று கோபமடைந்து மகளை அடிப்பதும், அதற்கான காரணங்களை ஆவேசமாக எடுத்துச் சொல்லும் போது நிமிர்ந்து நிற்கிறார். நாயகன் ராகுல் இயல்பான தோற்றம் என்றாலும், காதலிக்கு திருமணம் நடக்கப்போகிறது என்பதைக் கேட்டு ஜெயிலில் இருந்த படி படிக்கும் போது அனுதாபத்தை அள்ளுகிறார். நாயகி மீரா நந்தன் கோபக்கார அப்பா திட்டும்போது பூனையாக அடங்குவதும், அப்பாவுக்கு தெரியாமல் மறைவான இடங்களில் காதலனை சந்திக்கும்போது வாலிபத்தின் சேட்டைகள்  அருமை. இரண்டாவது நாயகனாக க்ளைமாக்ஸ் காட்சியில் ஆவேசப்படுத்தியிருக்கிறார். கஞ்சாகருப்பு, சூரி கோஸ்டி காமெடி சுமார். பென்வெயிலி இசை மனதில் நிற்கவில்லை. ஜே.கே.வெங்கியின் ஒளிப்பதில் காட்சிகள் பிரமிப்பு, சுப்ராஜ்கவி எடிட்டிங் கோர்வை. தயாரிப்பு ராஜன், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் மா.செல்லமுத்து காதலுக்கும், ஜாதிக்கும் மோதல் வந்தால் ஜாதிதான் ஜெயிக்கும் என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கிறது சூரியநகரம்.

படவிளக்கம்
சூரியநகரம் - ராகுல், மீராநந்தன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago