முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நம்பியாரின் மனைவி மரணம்: அ.தி.மு.க. சார்பில் அஞ்சலி

வெள்ளிக்கிழமை, 13 ஏப்ரல் 2012      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஏப்.13 - தமிழ் மற்றும் மலையாள படங்களில் வில்லன், குணசித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் மறைந்த நடிகர் நம்பியார். இவரின் மனைவி ருக்மணி (84) உடல்நலம் சரியில்லாததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்று முன்தினம் சென்னையில் மரணம் அடைந்தார். நம்பியார் - ருக்மணி தம்பதிகளுக்கு மோகமுள் நம்பியார், சுகுமார் நம்பியார் (இறந்துவிட்டார்) மகள் சினேகா சரத்பாபு உள்ளனர். ருக்மணி இறந்த செய்தி கேட்டு உறவினர் மற்றும் திரையுலகம், அரசியல் பிரமுகர்கள் இரங்கல் மற்றும் அஞ்சலி செலுத்தினார்கள்.

மேலும், அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா இரங்கல் செய்தி வெளியிட்டிருந்தார்.

 அதனைத் தொடர்ந்து,அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா சார்பாக, நேற்று (12.4.2012  வியாழக்கிழமை), அவைத் தலைவர் இ.மதுசூதனன், அமைப்புச் செயலாளர் ஈ.வெ.கி. சுலோச்சனா சம்பத் ஆகியோர், சென்னை, கோபாலபுரத்தில் வைக்கப்பட்டுள்ள ருக்மணி நம்பியாருடையத உடலுக்கு மலர் வளையம் வைத்து, அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்கள். அப்போது, நிர்வாகிகளும் உடன் இருந்தனர். பொதுமக்களின் அஞ்சலிக்குப்பின்னர், அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டு, தகனம் செய்யப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!