முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த 2 குழந்தைகளின் பெற்றோருக்கு நிதியுதவி அறிவித்தார் முதல்வர்

ஞாயிற்றுக்கிழமை, 2 நவம்பர் 2025      தமிழகம்
Cm 2025-02-20

Source: provided

சென்னை : திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி வட்டம், அயனம்பாக்கம் கிராமத்தில் கோவில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த 2 குழந்தைகளின் பெற்றோருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி வட்டம், அயனம்பாக்கம் கிராமம், மகாத்மா காந்தி நகர், பொன்னியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் தமீம் அன்சாரி (எ) தமிழரசு மற்றும் அவரது மனைவி வசந்தா ஆகிய இருவரும் நேற்று (01.11.2025 நண்பகல் 12.00 மணியளவில் பணி நிமித்தம் காரணமாக தங்களது இரண்டு குழந்தைகள் ரியாஸ் (வயது 5) மற்றும் ரிஸ்வான் (வயது 3) ஆகிய இருவரையும் வீட்டில் விட்டு வெளியில் சென்ற நிலையில் மேற்படி குழந்தைகள் இருவரும் அருகிலுள்ள பொன்னியம்மன் கோவில் குளத்தில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

மேலும், இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து