முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காமராஜரின் திட்டங்களை அரசியலாக்கி விவாதிக்க வேண்டாம்

ஞாயிற்றுக்கிழமை, 15 ஏப்ரல் 2012      சினிமா
Image Unavailable

சென்னை, ஏப்.15 - காமராஜர் போன்ற தலைவர்களின் திட்டங்களை அரசியலாக்காதீர்கள் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுக்குறித்து நேற்று சரத்குமார் வெளியிட்ட அறிக்கையில், தொழில், கல்வி, வேளாண்மை என அனைத்துத் துறைகளிலும் காமராஜர் படைத்த சாதனைகளை யாராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.  ஏழைக் குழந்தைகளைப் பள்ளிகளுக்கு வர வைப்பதற்காக மதிய உணவுத் திட்டத்தை காமராஜர் கொண்டு வந்தார்.அவரது ஆட்சியில் 27 ஆயிரம் பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்பட்டது. இத்திட்டம் வெற்றிபெற பிச்சை எடுக்கவும் தயார் என காமராஜர் கூறினார் என்று கூறப்பட்டுள்ளது.   மேலும், காமராஜரின் இந்தத் திட்டத்தை மற்ற மாநிலங்களும் பின்பற்றி வருகின்றன. 2006-ல் சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கில் நடைபெற்ற காமராஜர் நூற்றாண்டு விழா விழாவில், காமராஜரின் நற்பண்புகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா பேசினார். மதிய உணவுத் திட்டத்துடன் சத்துணவுத் திட்டத்தை எம்.ஜி.ஆர். தொடங்கினார். காமராஜர், எம்.ஜி.ஆர். போன்ற தலைவர்களின் திட்டங்களை அரசியலாக்கி விவாதிக்க வேண்டாம் எனவும் சரத்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!