எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திருச்சி. மார்ச். - 27 - அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக வேட்பாளர் ஜெயலலிதா திருச்சியில் இருந்து சூறாவளி தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தை தொடங்கி இருக்கிறார். அவர் சென்ற இடமெல்லாம் பொதுமக்களும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகிறார்கள். கடந்த 3 நாட்களாக ஸ்ரீரங்கம், திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் சுற்றுப்பயணம் செய்தார். இதுதவிர திருச்சி மாவட்டம் மணப்பாறை தொகுதியிலும் ஜெயலலிதா தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசினார்.
இந்த நிலையில் 3ம் நாள் தன்னுடைய தேர்சல் பிரச்சார சுற்றுப்பயணத்தை மாலை 5.15 மணிக்கு திருச்சி சங்கம் ஓட்டலில் இருந்து துவங்கினார். அங்கிருந்து ஐயப்பன் கோவில், அரசு தலைமை மருத்துவமனை வழியாக 5.25 மணிக்கு திருச்சி புத்தூர் நாலுரோடு வந்தடைந்தார். முன்னதாக அந்த பகுதியில் மதியம் 2 மணியில் இருந்து அதிமுக, தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட். மார்க்சிய கம்யூனிஸ்ட், புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி, பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கைகளில் கொடிகளை ஏந்தி ஜெயலலிதாவை வரவேற்க காத்திருந்தனர்.
இதைத்தொடர்ந்து புத்தூர் நாலுரோட்டில் இருந்து ஜெயலலிதா மூன்றாம் பிரச்சார சுற்றுப்பயணத்தை துவக்கி திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளர் மரியம்பிச்சையை ஆதரித்து பேசியதாவது:-
நபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல, தமிழக மக்கள் திமுக ஆட்சியின் பிடியில் இருந்து விடுதலை பெற்று தரும் தேர்தல் ஆகும். கடந்த 5 ஆண்டுகளில் தமிழக மக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கருணாநிதி எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. டீசல், பெட்ரோல், கியாஸ் விலை உயர்ந்தது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் பெட்ரோல் 9 முறை விலை உயர்த்தப்பட்டது. விலைவாசியும் குறையவில்லை. மணல் கொள்ளை இன்னமும் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. கருணாநியின் குடும்பத்திற்கு 50 ஆயிரம் கோடி ரூபாய் கிடைத்தது. அதேபோல் கிராணைட் கொள்ளை மூலம் 80 ஆயிரம் கோடி ரூபாய் கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் மின் உற்பத்திக்கு பதிலாக மின்வெட்டு பெருகிவிட்டது. இதனால் மின்வெட்டு மாநிலமாக தமிழகம் திகழ்ந்து கொண்டு இருக்கிறது. எங்கும் ஊழல், எதிலும் ஊழல் இந்தியாவிலேயே தன் மக்களுக்கு கோடி கோடியாக சம்பாதித்த ஒரே முதல்வர் கருணாநிதி.
தமிழக முழுவதும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. அரசு ஊழியர்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள் தாக்கப்படுகின்றனர். திருச்சியை பொறுத்தவரை இங்கு உள்ளூர் பிரச்சினைகள் பற்றி எனக்கு தெரியும். அனைத்து வசதிகளுடன் கூடிய திருச்சி புதிய பேருந்து நிலையத்தை அமைத்து காட்டுவோம். பொதுமக்களுக்கும், வியாபாரிகளையும் பாதிக்காத வகையில் திருச்சி காந்தி மார்க்கெட் இடமாற்றம் செய்யப்படும். திருச்சி புத்தூர் தலைமை அரசு மருத்துவமனையை தரம் உயர்த்துவோம். திருச்சி ஜங்சன் ரயில்வே மேம்பாலத்தை அகலப்படுத்துவோம். திருச்சி நகரில் குடிnullநீர் பிரச்சனைகளை தீர்ப்பதோடு தரமான சாலை வசதிகளை செய்வோம். போக்குவரத்து இடையூறுகளாக திருச்சி மேலப்புதூர் கான்வென்ட் பகுதி, தலைமை தபால் நிலையம், மெயின்காட்கேட் ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் எளிதாக சாலையை கடந்து செல்ல நடைபாதை மேம்பாலங்கள் அமைக்கப்படும்.
அமைச்சர் நேருவின் அட்டகாசத்தால் nullநீங்கள் பாதித்து இருப்பதை நான் நன்கு அறிவேன். நேரு அவரது சகோதரர் ஆகியோருக்கு தெரியாமல் திருச்சி மாவட்டத்தில் யாரும் இடத்தை வாங்கி பதிவு செய்ய முடியாது. அமைச்சர் கே.என்.நேரு தன்னுடைய பினாமிகளின் மூலம் 6 ஆயிரம் ஏக்கர் நிலத்தை வாங்கி குவித்து வைத்துள்ளார். அப்படிப்பட்ட நேருதான் திருச்சி தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் நேருவை தோர்கடிக்க செய்வீர்களா? (செய்வோம் செய்வோம் என தொண்டர்கள் கோஷமிட்டனர்) திமுக ஆட்சியில் முஸ்லீம்களுக்கு 3.5 சதவீதம் இடஒடுக்கீடு அளிப்பதாக கருணாநிதி கூறினார். ஆனால் அதை நடைமுறையில் அமுல்படுத்த வில்லை. உங்கள் ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைத்தால் முஸ்லீம்களின் இட ஒதுக்கீடு உயர்த்தப்படும் அதோடு இஸ்லாமியர்களின் அணைத்து கோரிக்கைகளும் பரிசீலிக்கப்படும். அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மின்வெட்டு அடியோடு ரத்து செய்யப்படும். விலைவாசி உயர்வு குறைக்கப்படும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கட்டுப்படுத்தப்படும். உங்களுடைய உள்ளூர் பிரச்சினைகள் தீர்க்கப்படும் அதோடு அனைவருக்கும் சுதந்திரம் கிடைக்க வழிவகை செய்யப்படும்.
பொதுமக்களாகிய உங்கள் பணத்தைதான் சுரண்டி வைத்துக்கொண்டு ஓட்டுக்கு 1 லட்ச ரூபாய் வரை கொடுப்பார். அந்த பணத்தை nullநீங்கள் வாங்கி வைத்துக்கொண்டு உங்கள் மனசாட்சி எப்படி சொல்கிறதோ அப்படி செய்யுங்கள். தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தால் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும். தற்போது வழங்கப்படும் திருமண உதவித்தொகையான ரூபாய் 25 ஆயிரத்துடன் 4 கிராம் தங்கம் வழங்கப்படும். அதேபோல காற்றாடி, கிரைண்டர், மிக்ஸி ஆகியவைகளும் இலவசமாக வழங்கப்படும். அதரவற்றவர்களுக்கும் முதியோர்களுக்கும் வழங்கப்படும் ரூபாய் 500 உயர்த்தி 1000 ரூபாயாக வழங்கப்படும். கரும்பு டன் கொள்முதல் 2500 உயர்த்தி தரப்படும். 11ம், 12ம் வகுப்பு ஆகிய படிப்புகளை அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணிக்கும் மாணவ மாணவிகளுக்கு லேப்டாப் கம்யூட்டர் வழங்கப்படும். கேபிள் டிவி அரசுடமையாக்கப்படும். வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு தலா நான்கு ஆடுகள் இலவசமாக வழங்கப்படும்.
பால் உற்பத்தியை பெருக்க தமிழகம் முழுவதும் 60 ஆயிரம் குடும்பங்களுக்கு கறவை மாடுகள் வழங்கப்படும். மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை ஆயிரம் ரூபாய் இருந்து 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்.
சுயஉதவிக்குழுக்களுக்கு 10 லட்ச ரூபாய் வரை கடன் உதவி வழங்கப்படும். 58 வயது மேற்பட்டவர்களுக்கு உள்ளூர் அரசு பேருந்துகளில் செல்ல இலவச பஸ்பாஸ் வழங்கப்படும். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 3 லட்சம் குடும்பங்களுக்கு 300 சதுர அடியில் நவீன பசுமை வீடுகள் கட்டித்தரப்படும். நிலமற்றவர்களுக்கு 3 சென்ட் நிலம் வழங்கப்படும். குடும்ப ஆட்சியில் இருந்து தமிழகத்தை மீட்டெடுக்க இந்த மேற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளராக மரியம்பிச்சை நிறுத்தப்பட்டுள்ளார். இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டுகிறேன்.
அதைதொடர்ந்து திருச்சி தென்னூர் தில்லைநகர், கோகினூர் தியேட்டர் வழியாக திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திற்கு ஜெயலலிதா சென்றார். அங்கு திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர். மனோகரனை ஆதரித்து ஜெயலலிதா வரலாறு காணாத கூட்டத்தில் பேசினார். முன்னதாக திருச்சி சங்கம் ஓட்டலில் இருந்து சத்திரம் பேருந்து நிலையம் வரை 6 கிலோமீட்டர் தூரத்திற்கு அதிமுகவினர் மற்றும் தோழமை கட்சி தொண்டர்கள் கைகளில் கொடிகலை ஏந்தி ஜெயலலிதாவிற்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
தங்கம் விலை மீண்டும் வரலாறு காணாத உச்சம்: ஒரு பவுன் 92,640-க்கும் விற்பனை
13 Oct 2025சென்னை, தங்கம் விலை நேற்று வரலாறு காணாத புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-10-2025.
13 Oct 2025 -
தீபாவளிக்கு வெளியாகும் பைசன்
13 Oct 2025அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கியுள்ள படம் பைசன்.
-
மருதம் திரை விமர்சனம்
13 Oct 2025ராணிப்பேட்டை அருகே உள்ள கிராமம் ஒன்றில் வசித்து வருபவர் விதார்த், மனைவி, மகனுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறார். விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கும் விதா
-
தேசிய தலைவர் பட இசை வெளியீட்டு நிகழ்ச்சி
13 Oct 2025எஸ்.எஸ்.ஆர் சத்யா பிக்சர்ஸ் வழங்கும் இசைஞானி இளையராஜா இசையில், எஸ்.எஸ்.ஆர்.சத்யா, ஜெனிபெர் மார்கிரட் ஆகியோர் தயாரிக்கும் படம் ‘தேசிய தலைவர்.
-
இளையராஜா இசையில் உருவாகும் மைலாஞ்சி
13 Oct 2025அஜயன் பாலா இயக்குநராக அறிமுகமாகும் படம் மைலாஞ்சி.
-
வில் (உயில்) திரை விமர்சனம்
13 Oct 2025தொழிலதிபர் ஒருவர் தனது சொத்துக்களை இரண்டு மகன்களுக்கு பகிர்ந்து கொடுத்து விட்டு ஒரு வீட்டை அலக்கியா பெயரில் எழுதி வைத்து விட்டு பின் இறந்து விடுகிறார்.
-
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை இன்று கூடுகிறது: வரும் 17-ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும்
13 Oct 2025சென்னை, பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று (அக்டோபர் 14) முதல் அக்டோபர் 17ஆம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்
-
தமிழகத்தில் 19-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு : இன்று 4 மாவட்டங்களில் கனமழை
13 Oct 2025சென்னை : தமிழகத்தில் இன்று முதல் அக்.19-ம் தேதி வரை 6 நாட்கள் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், இன்று கோவை, நீ
-
11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து: தமிழ்நாடு அரசாணை வெளியீடு
13 Oct 2025சென்னை, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
-
ஆய்வு செய்யாமல் உத்தரவிடுவதா..? கரூர் கூட்டநெரிசல் வழக்கில் ஐகோர்ட் நீதிபதிக்கு கண்டனம்
13 Oct 2025புதுடெல்லி, கரூர் கூட்ட நெரிசல் வழக்கை விசாரித்த விதத்திற்கு சென்னை உயர்நீதிமன்றத்துக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
சிப்காட் தொழில் பூங்காக்களில் 16 புதிய குழந்தைகள் காப்பகங்கள்; ரூ.190 கோடியில் திண்டிவனம், தேனியில் மெகா உணவு பூங்கா: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
13 Oct 2025சென்னை, சிப்காட் தொழில் பூங்காக்களில் 16 புதிய குழந்தைகள் காப்பகங்கள், ரூ.190 கோடி செலவில் திண்டிவனம், தேனியில் மெகா உணவு பூங்காக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்ற
-
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 92 கோடி ரூபாய் மதிப்பில் புதிய, முடிவுற்ற பணிகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
13 Oct 2025சென்னை, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.92 கோடி மதிப்பிலான 5 புதிய திட்டப்பணிகள் மற்றும் முடிவுற்ற பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
-
மதுரவாயலில் 1,600 பேருக்கு புதிய வீட்டுமனை பட்டாக்கள்: துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்
13 Oct 2025சென்னை, சென்னை, மதுரவாயில் பகுதியில் 1,600 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
-
எடுத்துக்காட்டான காந்திய வாழ்வு: நூற்றாண்டு காணும் லட்சுமி காந்தனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
13 Oct 2025சென்னை, லட்சுமி காந்தன் பாரதியின் வாழ்க்கையை, இன்றைய தலைமுறை தனக்கான பாடமாகக் கொள்ள வேண்டும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவ வழக்கு: சி.பி.ஐ. விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு : ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் 3 பேர் குழு அமைப்பு
13 Oct 2025புதுடெல்லி : கரூர் கூட்ட நெரிசல் சம்பவ வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
20 பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவித்தது: இஸ்ரேல் ராணுவம்
13 Oct 2025டெல் அவிவ், உயிருடன் உள்ள 20 பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவித்ததாக இஸ்ரேல் ராணுவம் உறுதி செய்துள்ளது.