முக்கிய செய்திகள்

மும்பை நகர் முற்றிலும் மாறி வருகிறது: அமிதாப்பச்சன்

புதன்கிழமை, 2 மே 2012      சினிமா
Image Unavailable

 

மும்பை,மே.- 2 - மும்பை நகர் முற்றிலும் மாறி வருகிறது என்று பிரபல இந்தி நடிகர் அமிதாப்பச்சன் தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் உள்ள ஒரு நிலக்கரி கம்பெனியில் தரகராக பணிபுரிந்த அமிதாப்பச்சன் திடீரென்று இந்தி நடிகரனார். அதிலிருந்து சுமார் 50 ஆண்டுகாலமாக மும்பையில் அமிதாப் வாழ்ந்து வருகிறார். அவர் தற்போது மும்பை நகர் அடியோடு மாறி வருகிறது என்று தனது இணையதளத்தில் கூறியுள்ளார். சீனாவில் உள்ள ஷாங்காய் நகர் மாதிரி மாறி வருகிறது என்றும் மும்பையில் தற்போது எங்கு பார்த்தாலும் பலமாடி அடுக்குக்கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது என்றும் இணையதளத்தில் அமிதாப் கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்: