முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இரவில் தேரோட்டம் நடத்தக்கூடாது: அரசு உத்தரவு

புதன்கிழமை, 23 மே 2012      ஆன்மிகம்
Image Unavailable

சென்னை, மே.24 - இரவில் தேரோட்டம் நடத்தக்கூடாது  என்று  இந்து அறநிலையத்துறை அறிவித்துள்ளது. ஆரணி மற்றும் குடியாத்தத்தில் தேரோட்டம் நடைபெற்றபோது தேர் விபத்துக்குள்ளானதில் சில பக்தர்கள் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து தேரோட்டத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் இரவில் தேரோட்டம் நடத்தக்கூடாது என இந்து அறநிலையத்துறை கமிஷனர் சந்திரகுமார் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே தேரோட்டம் நடத்த வேண்டும். அரசு அறிவித்துள்ள 33 விதிகளின் படியே தேரோட்டங்கள் நடத்தப்பட வேண்டும். தேரோட்டம் நடத்தப்படுவதற்கு 3 மாதங்களுக்கு முன்பே பொதுப்பணித்துறை தேரை ஆய்வு செய்யும். ஆய்வுகள் நடத்தப்பட்ட பின்னர் அறநிலைத்துறை சான்று வழங்கிய பிறகே தேரோட்டம் நடத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் மொத்தம் 987 தேர்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த தேர்களின் உறுதி தன்மை மற்றும் பாதுகாப்பு குறித்து இந்து அறநிலைத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். ஆய்வு செய்ததும் உறுதி சான்றிதழ் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
தமிழக கோவில்களில் அதிகரித்துவரும் சிலை மற்றும் உண்டியல் திருட்டு ஆகியவற்றை கண்காணிக்க சி.சி.டி.வி. கேமராக்கள் வைத்து கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் சந்திரகுமார் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago