முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அணிக்காக விளையாடத் தயாராக இருக்கிறேன்: யூசுப்

ஞாயிற்றுக்கிழமை, 3 ஜூன் 2012      விளையாட்டு
Image Unavailable

 

லாகூர், ஜூன். 3 -  பாகிஸ்தான் அணிக்காக எப்போதும் விளையாடத் தயாராக இருக்கிறேன் என்று மூத்த கிரிக்கெட் வீரரான மொக மது யூசுப் தெரிவித்தார். இலங்கை சுற்றுப் பயணத்திற்கான பாகிஸ்தான் அணியில் முன்னாள் கேப்டனான மொகமது யூசுப் இடம் பெறவில்லை. இது அவருக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. 

இதனைத் தொடர்ந்து அவர் மேற்கண்டவாறு தெரிவித்து இருக்கிறார். மேலும், தான் சர்வதேச கிரிக்கெட் போட்டி களில் விளையாட உடல் ரீதியாகவும், மனோ ரீதியாகவும் தயாராக இருப்பதாகவும் கூறியிருக்கிறார். 

37 வயதான மூத்த வீரரான யூசுப் இலங் கை சுற்றுப் பயணத்திற்கான பாகிஸ் தான் அணியில் நிராகரிக்கப்பட்டார். கடந்த ஒன்றரை வருட காலமாக தேசி ய அணிக்கு தேர்வு செய்யப்படாத போதிலும், தான் பொறுமை இழந்து விடவில்லை என்றும் அவர் கூறியிருக் கிறார். 

உடல் ரீதியாகவும் நான் நல்ல நிலையில் இருக்கிறேன். மனோ ரீதியாகவும் நான் நல்ல நிலையில் இருக்கிறேன். தேர்வுக் குழுவினர் விரும்பும் பட்சத்தில் நான் எப்போதும் பாகிஸ்தான் அணிக்காக விளையாட தயாராக இருக்கிறேன் என்று பாக். பேசன் நெட் வெ ப் சைட்டிற்கு அளித்த பேட்டியில் யூசுப் தெரிவித்து இருக்கிறார். 

பாகிஸ்தான் அணிக்காக விளையாட வேண்டும் என்ற ஆர்வம் என்னிடம் இன்னும் குறைந்து விடவில்லை. சமீப த்தில் லாகூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பிட்னஸ் டெஸ்டில் நான் கலந்து கொண்டேன். இதில் நா ன் நல்ல முறையில் தேர்வு பெற்றேன். எனக்கு தேர்வுக் குழுவினர் மீண்டும் ஒரு வாய்ப்பு அளிப்பார்கள் என்ற நம் பிக்கை உள்ளது என்றும் யூசுப் கூறியிரு க்கிறார். 

யூசுப் தற்போது தனிப்பட்ட முறையில் இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற் கொண்டு இருக்கிறார். தவிர, லாஷிங்ஸ் வேர்ல்டு லெவன் அணிக்காக விளை யாடியும் வருகிறார். 

இந்த சீசனில் உள்நாட்டுப் போட்டிகளி ல் பங்கு கொண்டு தனது திறமையை தேர்வுக் குழுவினருக்கு நிரூபிக்க தயா ராக இருப்பதாகவும் யூசுப் தெரிவித் தார். 

உள்நாட்டுப் போட்டிகளில் விளையாட நான் ஆயத்தமாக இருக்கிறேன். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தும் காயிதே அசாம் கோப்பை, தேசிய ஒரு நாள் கோப்பை, மற்றும் அனைத்து விதமான டி - 20 போட்டிகளில் விளை யாட திட்டமிட்டு இருக்கிறேன் என்றும் யூசுப் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்