முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எஸ்.எஸ்.எல்.சி. முதலிடத்தை தட்டிச்சென்றது தஞ்சாவூர் நகரம்

செவ்வாய்க்கிழமை, 5 ஜூன் 2012      தமிழகம்
Image Unavailable

மதுரை, ஜூன். - 5 - எஸ்.எஸ்.எல்.சி எனப்படும் 10 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் வெளியிடப்பட்டன. இதில் 500 க்கு 497 மதிப்பெண்கள் பெற்று தஞ்சாவூர் பி.ஆர். பப்ளிக் மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவர் பி. ஸ்ரீநாத் முதலிடத்தை பிடித்துள்ளார்.
2 ம் இடத்தில் 6 பேர்: 2 ம் இடத்தை 496 மதிப்பெண்கள் பெற்று 6 பேர் பகிர்ந்து கொண்டுள்ளனர். நாகர்கோவில் ஹெப்ரான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்த ஜென்கிங்ஸ் காட்பிரே 496 மதிப்பெண்கள் பெற்று 2 ம் இடத்தை பிடித்துள்ளார். இதே போல் திருநெல்வேலி பாளையங்கோட்டை புனித இக்னேசியஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவி இ.எம். நந்தினி, திருநெல்வேலி எஸ்.ஜே.எஸ். ஜூப்ளி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்த கே.என். மகாலெட்சுமி, ஈரோடு பாரதி வித்யாபவன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவி ஸ்வாதி, கரூர் சேரன் மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவன் கவின், செங்கல்பட்டு வைஷ்யா வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவி அகிலா ஆகியோரும் 496 மதிப்பெண்கள் பெற்று 2 ம் இடத்தை பிடித்துள்ளனர்.
3 ம் இடத்தில் 11 பேர்:
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 500 க்கு 495 மதிப்பெண்கள் பெற்று 11 பேர் 3 ம் இடத்தை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். திருநெல்வேலி எஸ்.ஜே.எஸ். ஜூப்ளி மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவி எஸ். சுனிதா, சிவகாசி லயன்ஸ் மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவி கே. சூர்யா, சிவகாசி ஒய்.ஆர்.ஆர்.டி.வி. மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவர் எஸ்.கே. அபிஷேக், பொள்ளாச்சி விவேக் வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவி ஆர். தரணி, ஈரோடு கொங்கு தேசிய மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவி டி. வினுமிதா, ஈரோடு ஸ்ரீவேதாத்ரி வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவி கே. ஷர்மிளா, சங்ககிரி கொங்கனாபுரத்தில் ஏ.ஜி.என். மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவன் எம். ஸ்ரீதரா, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் எஸ்.ஆர்.வி. ஹைடெக் மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவி பூஜாஸ்ரீ, திருப்பத்தூர் பிரம்மபுரம் பள்ளியில் படித்த மாணவி அம்ரிதா, காஞ்சிபுரம் மாமல்லன் மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவி ராஜேஸ்வரி, பொன்னேரி கலைமகள் மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவன் ஜஸ்டின் சேவியர் ஆகியோர் 500 க்கு 495 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். மொத்தம் 11 பேர் மூன்றாமிடத்தை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆக, முதல் மூன்று இடங்களை 18 மாணவ, மாணவிகள் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்