Idhayam Matrimony

தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர்கள் குழுமத்தின் நிர்வாகிகள் ஜெயலலிதாவுடன் சந்திப்பு

செவ்வாய்க்கிழமை, 19 ஜூன் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.- 19 - தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர்கள் குழுமத்தின் நிர்வாகிகள் முதலமைச்சர் ஜெயலலிதாவை நேற்று நேரில் சந்தித்தனர். இது குறித்து குழுமத்தின் தலைவர் டி.செல்வம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் குழுமத்தின் தலைவர், உபதலைவர், அகில இந்திய வழக்கறிஞர் குழுமத்தின் உறுப்பினர் மற்றும் உறுப்பினர்கள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை நேற்று (18.06.2012) நேரில் சந்தித்து வழக்கறிஞர்களின் சேமநல நிதியினை ரூ.2 இலட்சத்திலிருந்து ரூ.5 இலட்சமாக உயர்த்துமாறு கோரிக்கையினை சமர்ப்பித்தோம்.

முதலமைச்சர் எங்களது கோரிக்கையினை அன்புடனும், ஆதரவுடனும், பொறுமையுடனும் செவிமடுத்து பரிசீலனை செய்து ஆவண செய்வதாக உறுதி அளித்துள்ளார். எங்களது கோரிக்கை நல்ல செயல்முறையில் பரிசீலனை செய்யப்பட்டு வழக்கறிஞர்கள் சமுதாயத்திற்கு ஆதரவானதொரு முடிவு வெளியிடப்படும் என்று நம்புகிறோம். இவ்வாறு டி.செல்வம் தனது செய்தியில்  குறுப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago